என்னது ஆந்திரா பிரேதசத்தில் வர திங்களிலிருந்து பள்ளிகள் துவக்கமா!
ஆந்திரா பிரேதசத்தில் பள்ளிகள் இந்த மாதம் திறக்கப்பட்டுகிறது.
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!
என்னதான் பசங்களுக்கு வீட்டிலிருந்து போர் அடிச்சாலும் பள்ளிக்கு போகனும் சொன்னா கொஞ்ச கஷ்டமா தான் இருக்கு. அப்போ அப்போ லீவு விட்டா ஜாலியா தான் இருக்கும். ஆனா பள்ளி காலத்தோட என்ஜாய்மெண்ட் இனி வருமா? சகஜ நிலைமை எப்ப வரும்னு தெரியல!
பாவம் ஆசிரியர்கள்
ஆன்லைன் கிளாஸ்க்கு எந்த அளவுக்கு குழந்தைகளை பாவம்னு சொல்கிறோமோ அந்த அளவுக்கு ஆசிரியர்களும் ரொம்ப பாவங்க. சமூக வலைத்தளத்தில் அவங்க எவ்ளோ திண்டாடுறாங்க என்கிற மாதிரி பல கேலி கிண்டல் போயிட்டு இருக்கு. அது ஒரு வழியா முடிஞ்சுதுனு பார்த்தா ஸ்கூலுக்கு தினமும் வரணுமாம்.
ஆந்திராவில் பள்ளிகள்
13 ஜூலை முதல் அனைத்து பள்ளிகளும் கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் இயங்குகிறது.
ஆந்திரப் பிரதேச மாநில அரசின் உத்தரவுப்படி தொடக்கப் பள்ளிகள் வாரத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் என்றும், மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் வாரத்தில் இரண்டு முறை திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
அரசின் ஆணைப்படி, பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரிட்ஜ் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மேலும் குழந்தைகளை கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் உயர் தொழில்நுட்பம், குறைந்த தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப அற்ற முறைகளில் உத்திகள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும்.
முதன்மை, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் UDISE + தரவைப் புதுப்பிப்பதை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பெற்றோர் குழுக்களுடன் கலந்தாலோசித்து அபிவிருத்தி திட்டத்தை உருவாக்க மாநில அரசு பள்ளிகளையும் கேட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில பெற்றோர்களுக்கு ஒரு வழியா விடுவுகால கிடைச்சிடுச்சு. அலுவலகத்தில் குடுக்குற மாதிரி பிள்ளைங்க கிட்ட இருந்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாள் லீவு கிடைக்குது.