டிசம்பர் வரை பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிப்பு
இந்த ஆண்டு டிசம்பர் வரை பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவிப்பின்படி பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முடிவுகளை அறிவிப்பு ஆகிவிட்டது.
அடுத்து ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர ஆகஸ்ட் 15 முதல் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 24 பின்பு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 31 வரை அவர்களுடன் அறிவித்துள்ளதால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுவது தாமதம் ஏற்படுகின்றது.
தற்போது சாத்தியமில்லை என்ற தகவலும் கிடைக்கின்றது. வீரியம் குறைந்த பின்பு பள்ளிகளுக்கு மாணவர்கள் சென்று வரலாம். இதனை அடுத்து பள்ளி, கல்லூரிகளில் இந்த ஆண்டு டிசம்பர் 30 வரை திறக்கப்படாது என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் காரணமாக ஜனவரி பின்பு பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. இந்த அறிவிப்பால் இந்த ஆண்டு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.