பள்ளிகள் திறப்பதா பள்ளிக்கல்வித்துறை தகவல்
கொரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தன. அதன்பிறகு வருகின்ற 16ஆம் தேதி முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்புகள் வந்தன. பள்ளிகள் முழுவதும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தன. பெற்றோர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இதன்பிறகு திமுக கட்சியின் சார்பில் பள்ளிகளை தற்போது திறக்கக்கூடாது என எதிர்வாதம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளை திறக்கலாமா என்பதை குறித்து மாணவர்களுடைய பெற்றோர்களிடமும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும் கருத்துகள் கேட்கவும், மாநிலங்களில் உள்ள பள்ளிகள் முழுவதும் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடைபெற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்திருந்தன.
சென்ற முறை கேட்கப்பட்ட கருத்து கூட்டத்தில் பெற்றோர்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் 70 சதவீத பள்ளிகளைத் திறக்க கோரியதாக பெற்றோர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை தகவலை தெரிவித்துள்ளது.