பவுர்ணமி அன்று சாவித்திரி விரதம்
பவுர்ணமியன்று உயிரினங்களின் மன எழுச்சியும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பவுர்ணமியன்று கரடுமுரடாக நடந்துகொள்வார்கள். மனதை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஆனந்தத்தின் உச்சிக்கே செல்வதை உணர முடியும். கால நிலை மற்றும் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பௌர்ணமி தினத்தில் இறை வழிபாடு மேற்கொள்வது வழக்கத்திற்கு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனி மாதத்தில் கேட்டை மூல நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் இந்த மாதத்தில் தான் சாவித்ரி விரதமும் மேற்கொள்ளப் பட்டது. இந்த பவுர்ணமியில் முக்கனிகள் படைக்கப்பட்டு கண்ணனை நினைத்து விரதம் இருப்பதால் காதல் கைகூடுமாம்.

பவுர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுவதால் மாங்கல்ய பலம், ஐஸ்வர்யம், நீண்ட ஆயுள் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை. இந்த சாவித்திரி விரதத்தை, காமாட்சி விரதம், கௌரி விரதம் என பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுவதுண்டு.
சாவித்திரி காட்டில் அடை செய்து காரடையான் நோன்பு மேற்கொண்டார். இந்த நோன்பினால் கணவனுடைய ஆயுளை அதிகரிக்கும் என நம்பினார்கள். கற்பில் சிறந்தவளாக சாவித்திரி தன்னுடைய கணவனின் ஆயுள் காலம் முடிந்து.
அவனுடைய உயிரை பறித்துச் சென்ற போதிலும், எமதர்மனிடம் இருந்து மீட்டு வந்தார் என்று நம்பப்படுகிறது. சாவித்திரி ஆனி மாத அமாவாசையில் இருந்து மூன்று நாட்கள் விரதம் மேற்கொண்டால் இந்த காலத்தில் சாவித்திரி விரதம் என்கின்றனர்.
இவரது வழிபாடானது மாசி மாதம் கடைசி நாள் இரவு தொடங்கப்பட்டு பங்குனி மாதம் முதல் நாள் நிறைவு பெறுவது. வழிபாட்டின் முடிவில் வழிபாட்டில் இடம் பெற்ற நோன்பு கயிறு பெண்கள் அணியப்படுவது குறிப்பிடத்தக்கது.

மத்சேனன் மன்னனின் மகன் சத்யவான். அசுபதி மன்னனின் மகள் சாவித்திரி இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று. சாவித்ரி கௌரி விரதத்தை மேற்கொண்டிருந்தார். இந்த விரத காலத்திலேயே சத்தியவான் காட்டில் இறந்தார்.
தமிழ் கொண்ட கௌரி விரதத்தை முடிக்க மண்ணால் செய்த வடையை செய்து வழிபட்டாள் விரதம் பூர்த்தியான பின்பு எமதர்மனிடம் வேண்டி தன்னுடைய கணவனை மீட்டெடுத்தார் சாவித்திரி