சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நன்றியை தெரிவித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்து இருந்தனர்.
சாத்தான் குளத்தில் எஸ்ஐ யாக இருந்த ரகு கணேஷ் கைது செய்தனர். இந்த செய்தியை அறிந்த சாத்தான்குளம் அருகிலுள்ள நெடுங்குளத்தில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.
உயிரிழந்த ஜெயராஜின் மகளும், பென்னிக்ஸ் சகோதரியுமான செல்வராணி, உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பேசி உள்ளனர்.
இவர்களை கைது செய்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே தங்களது கோரிக்கையாக குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
சாத்தான் குளம் சம்பவம் தொடர்பாக மொத்தம் நான்கு பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். எஸ் ஐ ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாத்தான் குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மீது இன்னும் வழக்கு பதிய வில்லை என்பது தெரிந்துள்ளது. நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியது மகிழ்ச்சி என்றும்.
குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட உயிரிழந்த சாத்தான் குளம் பென்னிக்ஸ் சகோதரி தெரிவித்தார்.
சாத்தான்குளம் காவலர் மகாராஜன் அநாகரிகமான வார்த்தைகளாலும் ஒருமையிலும் பேசியதாக புகார் வந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
மேலும் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, ஏஎஸ்பி ஆன குமார், டிஎஸ்பி ஆன பிரதாபன், ஆகியோரும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
எஸ் பி அருண் பாலகோபாலன் என்பவரையும் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். இந்த வழக்கை தொடர்ந்து விசாரணைக்காக 12 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும், விசாரணையை பொருத்து எவ்வாறு மாற்றம் எப்.ஐ.ஆரில் வரலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.