இறைநெறி குறித்த சர்ச்சையா முருகா உன்னையும் விட்டு வைக்கலயாப்பா
கந்தசஷ்டி கவசம் பாடலில் ஒவ்வொரு உறுப்பையும் குறிப்பிட்டு காக்க வேண்டும் என்ற வகையில் இடம் பெற்ற வரிகள் விமர்சிக்கப்பட்டது குறித்து பேசும் ஆன்மீக செயற்பாட்டாளர் இறைநெறி இமையவன் “உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்” என்று திருமூலர் வாக்கு ஒன்று உள்ளன.
உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நலமுடன் இருந்தால் தான் உடல் வளமுடன் இருக்கும். இதனைத் தான் கந்தசஷ்டி கவசத்தில் ஒவ்வொரு உறுப்பும் நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்து பாடப்படுகின்றன.
இதிலென்ன ஆபாசம் இருக்க முடியும். உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் பல பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளன. நரம்பு மண்டல பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய பாதிப்பு இப்படி பல பாதிப்புகளை ஏற்படுத்தும். உறுப்புகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம்.
நம் உடல் உறுப்புகள் நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு உறுப்புகளையும் தனிமைப்படுத்தி குறிப்பிட்டு காக்க வேண்டும் என்ற வரிகளை கந்த சஷ்டியில் கொடுத்துள்ளனர்.
இப்பாடல்களில் ஒவ்வொரு உறுப்பையும் காக்க சொல்வது குறித்து கேலி செய்வதும், விமர்சனம் செய்வதும், கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளிவந்த காணொளி கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளன, இந்த காணொளி உருவாகியுள்ள எதிர்ப்புகளால் அக் காணொளியை வலை ஒளியின் பக்கத்தில் இருந்து நீக்கி உள்ளார்கள்.
இந்த வலையொளி நிர்வாகிகள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. கந்த சஷ்டி அன்றாடம் பாராயணம் செய்பவர்களும், பயபக்தியோடு ஒலிக்கச் செய்து கேட்பதாலும் அதன் பயன் கண்கூடாக உணரமுடியும்.
எனவே ஒவ்வொரு முறையும் கந்தசஷ்டி பயபக்தியுடன் பாராயணம் செய்து முருகப்பெருமானின் பரிபூரண அருளை பெறுங்கள். தேவையற்ற வதந்திகளை, எண்ணங்களை தவிர்க்க வேண்டும். கோவிலுக்கு சென்றால் நம் உடலில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை கடவுளிடம் சரி செய்து கொடுக்குமாறு பிரார்த்தனை செய்கிறோம் அல்லவா. அவற்றை தான் கந்தசஷ்டி பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளனர்.