ஆன்மிகம்

வீட்டில் விரைவில் திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க

வீட்டில் திருமணம் மற்றும் குழந்தை பேரூக்கும் வீட்டில் அமைதி பெற செல்வ வளங்கள் பெற நாக பூஜை செய்வது அவசியமாகும். சிலர் அறிந்தும் அறியாமலும் பாதுகாப்பு கருதியும் நாகங்களை கொன்றிருக்கலாம். அவ்வாறு நாகங்களை கொள்ளும்போது அது சர்ப்பதோஷம் ஆக மாறியிருக்கும். அதனால் அந்த வீட்டு அவரை சேர்ந்த உறவினர்களுக்கு திருமணம் குழந்தை பாக்கியம் சார்ந்த குறைகள் இருக்கும். இந்த நாக சர்ப்ப தோஷத்தை நாம் நிச்சயமாக போக்க வேண்டும். விவசாய குடும்பத்தில் இது போன்ற நிகழ்வுகள் அதிகம் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த தோஷத்தை போக்க இங்கே பரிகாரங்கள் கொடுத்துள்ளோம். அதனை முறையாக பின்பற்றி உங்கள் வீட்டில் குழந்தை பேறு மற்றும் திருமணம் ஆகியவை நடக்க வாய்ப்பு கிடைக்கப் பெறலாம்.

இந்த நாக சர்ப்ப தோஷம் ஏற்படும்போது காளகஸ்தி கோவிலுக்கு சென்று ராகு பூஜைகள் செய்வது மிக அவசியமாகும். வெள்ளி அல்லது செவ்வாய் அல்லது வளர்பிறை சஷ்டி என்பது நாக பூஜை செய்து வர உகந்த நாள் ஆகும்.

நமக்கிருக்கும் சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகி பெறும் விளக்கப் பெறும் இந்த சர்ப தோஷத்தை போக்க வீட்டில் நாம் செய்யவேண்டிய சர்ப்ப பூஜை விவரங்கள் மிகவும் கடினமானதாக இருக்குமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. எளிதான அனைவராலும் செய்யக் கூடியதாகவும் இந்த நாக சர்ப்ப பூஜை என்பது வாழ்விற்கு மிகவும் அவசியமானதாகும்.

சர்ப தோசம் நீங்க உகந்த நாள்:

சர்ப தோஷம் போக்க நாகதோஷ பூஜை செய்ய எந்த கிழமை, செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது வளர்பிறை சஷ்டி ஆகிய எந்த கிழமைகளில் தொடங்குகிறீர்கள் அந்த குறிப்பிட்ட கிழமைகளில் மட்டுமே பூஜையை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பூஜையை 9 வாரங்கள் செய்யலாம் அல்லது நாம் நினைத்தது நடக்கும் வரை செய்யலாம். திருமணம் குழந்தை பேறு நடக்கும் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வருலாம். குறைந்தபட்சம் ஒன்பது வாரங்களாவது இந்த பூஜையை செய்ய வேண்டும்.

நாக சர்ப்ப பூஜை செய்ய தேவைப்படும் பொருட்கள் பச்சரிசி மாவு எச்சிலை பாக்கு பழங்கள் சந்தனம் குங்குமம் திருநீறு வேண்டும். நீங்கள் எந்த நாளில் நாக சர்ப்ப பூஜை செய்கிறீர்களோ, அந்த நாளை தேர்ந்தெடுத்து அந்த உங்களுடைய பூஜை அறையை தூய்மை செய்யுங்கள். அந்த இடத்தில் சிறிய அளவில் அல்லது இடத்திற்கு ஏற்றார்போல் நாகர் படம் அரிசி மாவு மூலம் வரைய வேண்டும்.

இந்த நாகர் படம் வரைந்த பின்பு அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அருகில் பால் வெற்றிலை பாக்கு பழங்கள் பூக்கள் செய்துவைத்து நாக காயத்திரிமந்திரம் உச்சரித்தல் என்பது சிறப்பு தரும். நாக காயத்ரி மந்திரத்தை 27 முறை அல்லது 55 முறை அல்லது 108 முறை உச்சரிக்க வேண்டியது அவசியமாகும்.

காலை 7 மணிக்குள் இந்த பூஜையைச் செய்து முடிக்க வேண்டும்.மாலை செய்கிறீர்கள் என்றால் நாலு முப்பது மணி முதல் ஆறு முப்பது மணிக்கு இதனை செய்து முடிக்க வேண்டும் இதுபோன்ற பூஜை செய்து வரும் நாளில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரலாம். நாகர் உள்ள இடங்களில் வழிபட்டு வரலாம் அங்கு பால் வைக்கலாம். நாகம் என்பது சித்தர்கள் தங்கள் வாழ்விற்கு பயன்படுத்தியது அனைத்து கடவுளிடமும் நாகம் என்பது இருக்கின்றது ஆகையால் இந்த நாக பூஜை செய்து உங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள் உங்களது குறைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.

நாகப் பூஜை செய்ய தேவைப்படும் பொருட்கள்:

அரிசி மாவை வைத்து சர்ப்ப பூஜை செய்த பின்பு அந்த இடத்தை நல்ல துணி வைத்து துடைத்து கால் படாத மரத்தின் இடத்தில் அல்லது செடிகளில் அந்த மாவினை உதவிடுங்கள் அல்லது சேகரித்து நீரில் கரைத்து விடுங்கள் ஓடும் நீரில் கரைப்பது சிறந்தது கால் படாமல் செடிகளுக்கு செலுத்துவது சிறந்தது அருகில் புற்றுள்ள கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துதல் சிறப்பாகும் மேலும் இந்த பூஜை ராகு காலத்தில் செய்து வருவது என்பது சிறப்பானதாக கருதப்படுகிறது அதுவும் வெள்ளி செவ்வாய் ராகு காலத்தில் இந்த பூஜை செய்து வருவது இன்னும் உகந்ததாக இருக்கும் ஆனால் அந்த குறிப்பிட்ட காலங்களில் செய்ய முடியாது என்பவர்கள் செய்ய காலம் இல்லை என்று நினைப்பவர்கள் வெள்ளி செவ்வாய் சஷ்டி காலங்களில் காலை அல்லது மாலை செய்துகொள்ளலாம் பொதுவாக காலையில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் திருமணம் குழந்தைப்பேறு பெற்று அன்புடன் வாழ வாழ்த்துகின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *