Jallikattu bullsசினிமாசின்னத்திரைசெய்திகள்தமிழகம்

சரவணன் மீனாட்சி சீசன் – 4.. என்னது இந்த ஜோடியா திரும்பவும் வராங்க..

12 ஆண்டுகளுக்கு மேலாகயும் இன்றும் மக்கள் மனதில் இடம்பெற்று இருக்கும் இன்றளவும் இந்த சீரியலுக்காக எதிர்பார்த்து காத்து உள்ளனர் என்று சொன்னால் அது நமது விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் ஆகும். சரவணன் மீனாட்சி என்று சொன்னாலே மக்கள் குஷியாகும் அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்தது.

கடந்த 2011 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி சீசன் 1 தொடங்கிய நிலையில் மக்களின் பேராதரவுடன் சீசன் 2 சீசன் 3 ஆகியவையும் வெற்றிகரமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில் எந்த சீரியலுக்கும் சீசன் 2 என்றாலே போதும் வேற ஏதாவது சீரியலுக்கு போங்க 2 , 3 போகாதீங்க அப்படின்னு சொல்ற நம்ம மக்கள் 10 சீசன் போனாலும் சலிக்காம நாங்க பாக்க தயார் நீங்க தயங்காம சீரியல் மட்டும் சீசன் சீசன் ஆக ரிலீஸ் பண்ணுங்க அப்படின்னு சொல்ற அளவுக்கு நம்ம சரவணன் மீனாட்சி சீரியல் இடம் பிடித்தது.. இந்த சீரியலில் நடித்த பலரும் பல்வேறு வெற்றியின் பாதையை நோக்கி முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க : கொக்கு சைவக் கொக்கு… முத்து படம் பாடல்

இப்படி சரவணன் மீனாட்சி சீரியலுக்கு நல்ல ஆதரவு இருக்கும் நிலையில் இன்றும் இவர்கள் சீரியலுக்கு சீக்கிரம் வர மாட்டாங்களா அப்படின்னு சொல்ற முன்னணி நாயகியா நம்ம ஆலியா மானசா இருக்காங்க.

இவங்க பிரசவத்தின் காரணமாகவும் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் குடும்பத்தோட நேரத்தை செலவிடனும் அப்படிங்கற காரணத்தாலையும் தான் ராஜா ராணி சீசன் 2 சீரியல் இருந்து விலகினார். சீக்கிரமா ரி என்ட்ரி கொடுப்பேன் அப்படின்னு சொல்லி இருந்தாங்க ஆனா குடும்பத்தின் மதிப்பு கருதி அவங்க திரும்பவும் ராஜா ராணி சீரியலில் நடிக்கவில்லை. இருந்தாலும் நம்ம ஆலியா மானசா ரசிகர்கள் நீங்க சீக்கிரமா சீரியல்க்கு வரணும்.. நீங்க வந்தா நாங்க எல்லாம் ரொம்ப சந்தோஷப்படுவோம் அப்படின்னு ரசிகர்கள் கேட்டதால், கண்டிப்பா சீக்கிரமா நான் வேற ஒரு சீரியல்ல உங்களை வந்து சந்திப்பேன் என்று ஆலியா மானசா சொல்லி இருந்தாங்க. அவங்க சொன்ன வாக்கை நிறைவேற்றும் விதமாக ஆல்யா மானசா மட்டும் இல்லைங்க நம்ம திரும்பவும் இந்த ஜோடி ரீ என்ட்ரி கொடுத்தா நல்லா இருக்குமே அப்படின்னு நினைச்ச படி நெஜ வாழ்க்கையில மட்டும் இல்ல என்றும் நாங்கள் காதலர்களே என்று சரவணன் மீனாட்சி சீரியல் சீசன் 4 இல் சரவணன் கதாபாத்திரத்தில் சஞ்சீவ் மீனாட்சி கதாபாத்திரத்தில் ஆலியா மானசாவும் நடிக்க உள்ளனர்.

மேலும் படிக்க : கோவிந்தா கோவிந்தா…எங்கேயும் எப்போதும் படம் பாடல்.

சீரியலின் ப்ரோமோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்தவுடன் சரவணன் மீனாட்சி சீரியல் இன் பல்லாண்டு ரசிகர்களும், ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஜோடியாக இருந்த சஞ்சீவ் ஆலியா இந்த சீரியலில் நடிக்க உள்ளதையும் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்… இப்பொழுது சீசன் 4 வரும் என்று ஆவலுடன் அனைவரும் மகிழ்ச்சியில் எதிர்பார்த்து உள்ளனர்.. கண்டிப்பா மத்த சீசன்களை விடவே இந்த சீசன் நல்ல ஹிட் கொடுக்கும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் promo – வை பார்த்தவுடனே வந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *