Videosசினிமா

பிஸ்கோத்து செம கலாய்

பிஸ்கோத் சாப்பிட்டா நல்லா இருக்கும் தெரியும் அது என்னங்க செம கலாய்னு கேக்கறீர்களா! சந்தானம் நடிப்பில வெளியாக இருக்கும் படம் பிஸ்கோத். அந்தப் படத்தோட ட்ரெய்லர் இன்னிக்கி திங்க் மியூசிக் யூடியூப்பில் வெளியிட்டு இருக்காங்க.

ஆர். கண்ணன் எழுதி இயக்கியிருக்கும் படம் பிஸ்கோத்து. சந்தானம் பல வேடங்களில் இந்த படத்தில கலக்கி இருக்காரு. சந்தானம் மட்டும் இல்லைங்க மொட்டை ராஜேந்திரன் ஆனந்தராஜ் சௌகார் ஜானகி லொள்ளு சபா மனோகர் மற்றும் சந்தானத்தோட ஏ1 படத்துல கதாநாயகியாக நடிச்ச தாரா அலிஷா பெர்ரி தான் இந்தப் படத்திலும் கதாநாயகியா நடிக்கிறாங்க.

திங்க் மியூசிக்கு இன்னிக்கு ரொம்ப பிஸியான நாள். அடுத்தடுத்து ரிலீஸ் பண்ணிட்டே இருக்காங்க. பிஸ்கோத்து படத்தோட ட்ரெய்லர் செமையா வேற லெவல் கலாயா காமெடியா வெளியிட்டு இருக்காங்க.

பன்னிரண்டாம் நூற்றாண்டின் ராஜானு ஆரம்பிக்கிற இந்த கதையில எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்த ஸ்பூப் பண்ணியிருக்காங்க. சந்தானம் பாகுபலியாவும் அவரோட அண்ணன் கேரக்டர்ல ஆனந்தராஜும் கட்டப்பா வேடத்தில் மொட்டை ராஜேந்திரனும் நடிக்க கட்டப்பா தலையில பாகுபலி கால் வைக்கிற மாதிரி வர சீனை சந்தானமும் மொட்டை ராஜேந்திரனும் செமையா காமெடி பண்ணி இருக்காங்க.

இந்த படத்தோட இயக்குனர் சில நாட்களுக்கு முன்பு கொடுத்த பேட்டில அந்த காலத்து ராஜா பத்தி 30 நிமிடம் காட்சிகள் இருக்குன்னு சொல்லி இருந்தத இன்னிக்கி ட்ரெய்லர்ல பட்டைய கிளப்பு இருக்காங்க. 90ஸ் ஹீரோ ஸ்டைல இன்னொரு வேடத்திலும் சந்தானம் வராரு. கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் பண்ணுவதற்கு மற்றொரு வேடம்னு மொத்தம் மூணு வேடத்துல சும்மா சுத்தி சுத்தி கலாய்ச்சு காமெடி பண்ணி இருக்காரு சந்தானம்.

கொரோனா பத்தின விழிப்புணர்வு செய்யும் விதமா ட்ரெய்லரை வெளியிட்டு இருக்க இந்த குழுவுக்கு ஒரு பலத்த பாராட்ட சொல்லியே ஆகணும். அதுமட்டுமில்லாம ஓடிடி ரிலீஸையும் கலாய்க்க மறக்காம இருந்திருக்காங்க இந்த படத்தோட குழுவினர். மக்களே பிஸ்கோத் ட்ரைலரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *