மத்திய அரசு திட்டம் ஒரு ரூ.1 க்கு சுவிதா நாப்கின்
இந்தியாவில் சானிட்டரி நாப்கின்களின் மாதாந்திர பயன்பாடு 500 கோடி யூனிட்டுகள் ஆக உள்ளன. ஒரு நாப்கின் தயாரிக்க மதிப்பிடப்படும் உற்பத்தி செலவின் அடிப்படையில் திட்டத்தின் செலவு ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிதா திட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை பங்குதாரர்களாக சேர்க்கும் முயற்சிகளும் தொடங்கின. ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பெண்களின் சுகாதாரம் மற்றும் முன்னேற்றத்தில் அரசு செய்து வரும் முயற்சிகளில் மிகவும் முக்கியமானது.
இந்த சுவிதா நாப்கின் திட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். சுவிதா நாப்கின்கள் 2018 ஆம் ஆண்டில் 2.5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டிலிருந்து 1 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தன. வேதியியல் மற்றும் உர அமைச்சகத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் சுவிதா திட்டத்திற்கு நிதி அளிக்கும் தகவலை உறுதி செய்தார்கள்.
பிரதமரின் ஜனாசாதி பரியோஜனா திட்டத்திற்கான ஏஜன்ஸி ஆக செயல்படும். வேதியியல் அமைச்சகத்தின் இயங்கும் பார்மசூட்டிக்கல் துறை மூலம் மலிவு விலை நாப்கின்கள் விற்கப்படுகின்றன.
சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு 1 ரூபாய்க்கு சுவிதா சானிடரி நாப்கின் திட்டம் பற்றி பேசினார்.
தற்போது மலிவு விலையில் நாப்கின் தயாரிக்கும் முயற்சி ஊக்குவிக்க ரூபாய் 12,000 கோடி நிதி உதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகின. இது பற்றிய செய்தியை பிரிண்ட் இணையதளம் வெளியிட்டுள்ளன.