குரு பெயர்ச்சியை தொடர்ந்து சனிப்பெயர்ச்சி ஆரம்பம்
குருபெயர்ச்சியை தொடர்ந்து வரும் 27 டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனிப் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மீனம் நிகழ்கிறது. கும்பத்திற்கு ஏழரை சனி தொடங்க உள்ளன. மகரத்திற்கு ஜென்ம சனி ஆரம்பமாகிறது. தனுசு ராசிக்கு பாதச்சனி நிகழ்கிறது. மிதுனத்திற்கு அஷ்டமச்சனி. கடகத்திற்கு கண்ட சனி. துலாம் அர்தாஷ்டமச்சனி ஆரம்பம்.
- 27 டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
- சனிப் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்.
- சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியவை.
சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கள் செய்ய வேண்டியவை
ஏழரைச்சனி நிகழவிருக்கும் ராசிக்காரர்கள் இந்த பரிகாரங்களை செய்வதால் பாதிப்பில் இருந்து விடுபடலாம். சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட வேண்டும். சனிக்கிழமைதோறும் காகத்திற்கு அன்னம் படைக்க வேண்டும்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு, வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்கு, பசியால் வாடுபவர்களுக்கு, உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். கோவில் அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். சனிப்பிரதோஷம் வழிபாடு சாலச்சிறந்தது.
ஏழை குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு உதவலாம். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவரை வணங்கி வரவும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
மேலும் படிக்க : முருகரின் கந்த குரு கவசம் பாடல்
ஆண்கள் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். சனிக்கிழமைகளில் அசைவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம். காகத்திற்கு எள் கலந்த அன்னத்தை தினமும் வைப்பது நல்லது.
மேலும் படிக்க : ஆசை இல்லையா? ஆன்மீகம் தேவையில்லை