சங்கல்பத்தில் சகலுமும் இருக்குமா , மச்சாவாதாரமும் மரிக்கும் உலகமும்
சங்கல்பத்தில் உள்ள கல்பமும் மற்றும் சில விவரங்களும்
“மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் சுபே சோபனே முகூர்த்தே அத்ய பிரம்ஹன: த்விதீயாபரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே…“
அனைத்து ஆன்மீக காரியங்களுக்கும் செய்யும் சங்கல்பத்தின் வரிகள் இவை. பலபேர் இந்த வரிகளை அறிந்திருந்தாலும் எவ்வளவு பேர்களுக்கு அதன் அர்த்தம் தெரியும்!!!
இந்த வரிகளின் கடைசி இரண்டு வார்த்தைகளான ‘ஸ்வேத வராக கல்பம்’ மற்றும் ‘வைவஸ்வத மனு’ ஆகிய இரு வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை இக்கட்டுரையில் காண்போமா…
ஸ்வேத வராக கல்பம்:
சத்ய யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம் என யுகங்கள் நான்கு யுகங்கள் உண்டு. இந்த நாளு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்தது ஒரு கல்பம்.
நாம் வாழும் இந்த கல்பத்தில் மகாவிஷ்ணு வராக மூர்த்தியாக அவதாரம் எடுத்தார். அந்த வராக அவதாரம் என்பது வெள்ளை வெளேர் நிறத்துடன் கூடிய பன்றி. ‘ஸ்வேத வராகம்’ என்ற சொல் வெள்ளை வெளேர் நிறத்துடன் கூடிய பன்றி என்று பொருள் தரக்கூடியது. ஆகையால் வராக மூர்த்திக்கு ஸ்வேத வராக என்ற பெயரும் உண்டு அதோடு இந்த கற்பத்திற்கு ஸ்வேத வராக கல்பம் என்று பெயர் பெற்றது.
வைவஸ்வத மனு:
கஷ்யப மகரிஷிக்கு மகனாக சூரியபகவான் பிறந்தார். ஸ்வர்ச்சலா தேவிக்கும் சூரிய பகவானுக்கும் மனு என்பவர் மகனாகப் பிறந்தார். சூரிய பகவானுக்கு விவஸ்வான் என்னும் பெயரும் உண்டு ஆகையால் மனுவிற்கு வைவஸ்வத மனு என பெயர் பெற்றார்.
சத்தியவிரதன், ச்ராத்ததேவ மனு என்னும் மறு பெயர்களும் இவருக்கு உண்டு. நாம் வாழும் இந்த பூமி மனுவின் காலத்திலேயே உருவாக்கப்பட்டது. அந்தக் கதையைப் பார்ப்போமா.
சத்திரிய குலம்:
க்ஷத்ரிய குலத்தில் பிறந்த வைவஸ்வத மனு நித்ய கர்மாவைச் செய்வதற்காக ஒரு நீர்நிலையை அடைந்தார். அதை செய்யும் மத்தியில் அர்க்கியம் விடுவதற்காக தண்ணீரை தன் இரு கைகளால் அள்ள அதில் ஓர் மீன் அகப்பட்டது. எதேச்சியாக நடந்த செயல் என்று எண்ணி அதை மறுபடியும் தண்ணீரில் விட்டார். ஆனால் மறுபடியும் அர்க்கியம் விடுவதற்காக கையை எடுக்க மீன் தென்பட்டது. மூன்றாவது முறையும் இந்த சம்பவம் நடக்க அந்த மீனை தன்னுடன் எடுத்து வந்த கமண்டலுவில் விட்டார்.
நித்திய கர்மாவை முடித்து வீடு திரும்பியதும் கமண்டலுவை பார்த்தபோது மீனின் அளவு பெரிதாகி கமண்டலுவை அடைத்தது. உடனே அந்த மீனை எடுத்து ஒரு சட்டியில் போட்டார். சற்று நேரத்திலேயே அந்த மீன் சட்டி அளவிற்கு பெரிதாகியது. பின் ஒரு தொட்டியில் போட்டார்.நீங்கள் யூகித்தவாறே அது தொட்டி அளவிலும் பெரிதாகிற்று.
மச்சாவதாரம் உலகம் :
அந்த மீனை எடுத்துக் கொண்டு கடலுக்குச் சென்று அதில் விட்டார். அப்பொழுதும் அதன் அளவு கடலளவு பெரிதாகியது. வைவஸ்வத மனு அந்த மீனை நோக்கி “நீ யார் என்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் பெரிய சக்தி வாய்ந்தவர் என்று மட்டும் புரிகிறது” என்று வணங்கி கூறினார். அப்பொழுது மீன் பேசிகிறது “நானே மகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்து வந்துள்ளேன். இந்த உலகம் பிரளயம் வந்து அழியப்போகிறது. நீயும் சப்தரிஷிகளும் மற்றும் இந்த உலகத்தை மீண்டும் பிறப்பிக்க தேவைப்படும் விதைகள் தானியங்கள் ஔஷதிகள் என்று அனைத்தையும் ஒரு படகில் ஏற்றிக்கொண்டு காத்திருக்க நான் உங்களை காப்பாற்றுவேன்.”
உலகமே பிரளயம் ஏற்பட்டு ஜல மயமாக இருந்தது. இவர்கள் படகில் இருக்க அந்தப் பெரிய மீன் கண்முன்னே தோன்றி தன் கொம்பில் படகை ஒரு கயிற்றினால் கட்ட சொல்ல அவர்கள் அவ்வாறே செய்தபின் தண்ணீரில் மீன் சுழற்சிக்கு ஏற்றவாறு அந்தப்படமும் சுழன்றது. அப்பொழுது ஸ்ரீமன் நாராயணர் மச்சாவதாரம் மூலமாக பல போதனைகளை மனுவிற்கு வழங்குகிறார்.
பிரளயம் முடிந்த பின் உலகம் சமநிலையில் இயங்க தொடங்கியது. வைவஸ்வத மனுவின் ஆட்சியில் உலகம் ஏற்பட அவர் பெற்ற போதனைகளை நூலாக இயற்றினார். அவை மனு கல்ப சூத்திரம், மனு க்ருஹ்ய சூத்திரம், மனு தர்ம சாஸ்திரம் போன்றவையாகும்.
யுகம் ஏற்பட்ட அந்த நாளே ‘யுகாதி’ எனவும் அதற்கு முன் நாள் ‘மச்சாவதாரம் ஜெயந்தி’ எனவும் கொண்டாடப்படுகிறது.