ரஷ்யாவை மிரட்டும் தடைகள்:- கண்டுகொள்ளாத புடின்..
ரஷ்யா தனது வான் பரப்பை பயன்படுத்த முன்னாள் சோவியத் நாடு ஒன்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்து.
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டு வரும் உக்ரைன் வீரர்களுக்கு பல் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வாரி வழங்கி வருகின்றனர். மேலும் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பொருளாதார தடை உள்ளிட்ட பல் தடைகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில், பிரிட்டன், செக் குடியரசு, போலந்து நாடுகள், தனது வான் பரப்பை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதனைதொடர்ந்து, தற்போது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான எஸ்டோனியாவும் தனது வான் பரப்பை பயன்படுத்த ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.
தனது வான்வெளி மற்றும் விமான நிலையங்களை ரஷ்ய விமானங்கள் பயன்படுத்த எஸ்டோனியா தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரைபடம் கிழே உள்ளது.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலந்து, பல்கேரியா மற்றும் செக் குடியரசு விமான நிறுவனங்கள் தனது வான்வெளியை பயன்படுத்தத் ரஷ்யா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் தனக்கு எதிராக தடைகளை விதித்துள்ள நாடுகளின், ரஷ்யாவில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய ரஷ்யா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் மிரட்டல்களுக்கு அச்சப்படாமல் ரஷ்யா உறுதியுடன் போரிட்டு வருகிறது. மேலும் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கிழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு ரஷ்யா அதிபர் புடின் கேட்டுக்கொண்டுள்ளார்.