சினிமா

இயக்குனர் அஸ்வின் சரவணனின் பேய் படத்தில் ஊமையாக நடிக்கும் சமந்தா

இயக்குனர் அஸ்வின் சரவணன் முதன் முதலில் நடிகை நயன்தாராவை வைத்து இயக்கிய “மாயா” திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து டாப்ஸி உடன் இணைந்து “கேம்ப் ஓவர்” படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் பேய் படத்தில் சமந்தா ஊமையாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தனது இரண்டு படங்களையும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இயக்கியவர் மூன்றாவது படமும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சமந்தாவுடன் இணைந்தார்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டன. தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன.

இப்படத்தில் நடிகை சமந்தா ஊமையாக நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளன. இதற்காக இவர் சிறப்பு பயிற்சியும் எடுத்துக் கொண்டு வருகிறாராம்.

இதனால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளன. பேய் படத்தில் ஊமையாக நடிக்கும் சமந்தா படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *