சினிமா

நம்ம பொன்மகள் சம்பளம் இவ்வளவா

பொன்மகள் வந்தாள் கதாநாயகிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாங்க!!!

இரண்டு குழந்தைகளுக்குத் தாய் 90ஸ் ஹீரோயினா இருந்தும் இப்பவும் கதாநாயகியா தமிழ் சினிமா துறையை கலக்கிட்டு இருக்காங்க பாருங்க நம்ம ஜோதிகா…

இது எப்படி சாத்தியம்னு பாத்தீங்கன்னா நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வெச்சு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி படங்கள் நிறைய வந்த காலத்துல ஜோதிகாவுடன் செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆச்சு அதுவே அவங்களுக்கு ஒரு பிளஸ்… 36, மகளிர் மட்டும், ஜாக்பாட் என செம ஃபார்ம் கதாநாயகியாக திரையுலகத்திற்கு திரும்பி இருக்காங்க… ஜோவின் மிரளவைக்கும் புல்லட் அவதாரம் குறிப்பிடத்தக்கது…

“கண்ணா லட்டு தின்ன ஆசையா… கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா…”

இந்த விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது. பர்சனல் லைப் கரியர் லைஃப் ரெண்டு அருமையா அமையதுனா அது கடவுள் கொடுத்த வரம் தான் சொல்லலாம். நம்ம இதயம் நல்லெண்ணை கதாநாயகிக்கு அது அமைஞ்சிருக்கு…

ஜோ நடிக்கும் படம் தனது கணவரான சூர்யாவின் 2டி என்டர்டேன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலே சமீப காலத்தில் வருகின்றன. அதற்கு ஜோவின் சம்பளத்திலே 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சூர்யா பதிலளித்துள்ளார். மேலும் ஜோதிகா பண விஷயத்தில் கறாரான மனிதர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்ம பொன்மகள் கிட்ட எவ்வளோ வாங்கறாங்கன்னு கேட்டதுக்கு!!!

“பொதுவாக கதாநாயகனுக்கு சங்கம் வைக்கும் அளவிற்கு பவுசு கதாநாயகிக்கு அல்ல. எனக்கென்று இருக்கிற சிறு ரசிகர் கூட்டம் என் படத்தின் டீசர், ட்ரைலரை பார்ப்பதற்கு முன் என் கணவரின் ரசிகர்கள் அதனை வைரல் ஆக்குகின்றனர். அவர்களே எனது சம்பளம்.”

என்ற ஜோவின் பேட்டிக்கு சூர்யாவின் ரசிகர் மன்றங்கள் தன்னை சம்பளமாக கொண்டதில் மிகவும் நெகிழ்ந்து உள்ளனர்.

36 வயதில் , காற்றின் மொழி போன்ற படங்களில் இல்லத்தரசியாக நடித்தாலும் கதாநாயகி என்ற கெத்து அவர்களை விட்டு அகலவில்லை. மகளிர் மட்டும், ஜாக்பாட் இந்த இரண்டு படங்களில் கல்லூரி முடித்து வேலையில் ஈடுபட்டிருக்கும் திருமணமாகாத வாலிப வயது பெண்மணி தோற்றத்தில் அசத்தியுள்ளார். ராட்சசி படம் தனி ரகம். பள்ளியின் தலைமை ஆசிரியராக காட்சியளித்து முன்னாள் ராணுவ அதிகாரியாக மிரட்டியுள்ளார். தற்போது வந்த பொன்மகள் வந்தாள் என்னும் திரைப்படம் நாட்டில் நடக்கும் குழந்தைளுக்கு எதிரான அராஜகத்தை முன்வைத்து பல படங்களின் பட்டியலில் இதுவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்கி ஜோவின் நடிப்பில் இன்னும் பிரமாதமாக வந்துள்ளது என்று கூறினால் மிகையாகாது.

ஜோதிகா கூறியது உண்மைதான் சமூக வலைத்தளங்களில் ஜோதிகாவின் படம் லைக் ஷேர் ஆவது சூர்யாவின் ரசிகர்களாலேயே.

கடைசி வரைக்கும் கரெக்டா எவ்வளவு சம்பளம்னு சொல்லாமல் மறச்சுடாங்க…

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவின் பெயர் அடிபடுவதாக ஓர் அரசல்புரசலாக சொல்லப்படுகிறது… பொறுத்திருந்து பார்ப்போம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *