குங்குமப்பூ நாச்சுரல் பேசியல் மற்றும் மாஸ்க் பேக்
உருளைக்கிழங்கை தோல் உரித்து பச்சையாக கட் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிய வெள்ளரிக் காயையும் கட் செய்து மிக்ஸியில் தேன் கலந்து நன்றாக மைய அரைத்து எடுத்து கண்களுக்கு அடியில் தடவி சிறிது நேரம் விட்டு கழுவ வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்து வருவதால் நல்ல மாற்றம் கிடைக்கும். கருவளையம் மறைந்து பொலிவு பெறும்.
ஹேர் மாஸ்க்
வாரத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ ஹேர் மாஸ்க் செய்து வர வேண்டும். இதனால் முடி நன்றாக இருக்கும். முட்டையின் வெள்ளைக்கரு, சிறிது ஆயில், லெமன் சாறு கலந்து நன்றாக இந்த கலவையை கலக்க வேண்டும்.
எல்லாம் ஒன்றாக ஆகும் வரை சிறிது நேரம் கலக்கி, பிறகு இதை தலைக்குத் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். இதனால் முடிக்க ரத்த ஓட்டம் கிடைப்பதுடன் முடி கொட்டும் பிரச்சனை தீரும். முடியும் நன்றாக வளரும். முடி வறட்சி நீங்கும். முடிக்கு புரோட்டீன் சத்து கிடைப்பதுடன் ஆரோக்கியமாக வளரும். பொடுகை போக்கும்.
வாசனை பொடி
சோப்பிற்கு பதிலாக வாசனை பொடிகளை சிறிது பால் அல்லது வடித்த கஞ்சி தண்ணீரை சேர்த்து உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் வியர்வை நாற்றம் போகும். ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் சந்தனத் தூளை, ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவு, ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர், இவை அனைத்தையும் கலந்து வைத்து கொள்ளுங்கள்.
தேவையான போது அவ்வப்போது எடுத்து இதை கலக்கி வைக்கலாம். இதை தேய்த்து குளிப்பதால் உடல் வாசனையாகவும், வியர்வை நாற்றம் என்று இருக்கும். அன்றைய நாள் புத்துணர்வுடனும் இருப்பீர்கள்.
ஸ்கூலுக்கு போகும் குழந்தைகளுக்கு பேன் தொல்லைகள் இருந்தால், வேப்பிலையை பேஸ்ட்டாக அரைத்து தலையில் பேக் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லை ஒழியும். முகம் பளபளப்பாக இருக்க கடலை பருப்பு வைத்து பேசியல் செய்யலாம்.
குங்குமப்பூ பேசியல்
பேசியல் செய்ய கடலை பருப்பு 2 ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். இதை அரை மணி நேரம் ஊற வைத்து இதனுடன் குங்குமப்பூ சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் முகம் பளபளப்பாக மாறும். குங்குமப்பூ சேர்ப்பதால் கலர் கிடைக்கும்.
முகப்பருவை தடுக்க ஒரு தக்காளியை அரைத்த விழுது ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் சந்தனத் தூள், கால் ஸ்பூன் தேன், கலந்து முகத்தில் பூசி வர முகப்பரு நாளடைவில் மறைந்து விடும். முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி நாளடைவில் முகப்பரு வருவது குறைந்து விடும். 20 நிமிடம் அப்ளை செய்து காய வைத்து கழுவ வேண்டும்.
வெயிலால் கருத்த முகம் சிவப்பாக, அரைத்த தக்காளி ஒரு ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், லெமன் அரை ஸ்பூன், அனைத்தும் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து காய விட்டு கழுவி வர நல்ல மாற்றம் கிடைக்கும்.