மருத்துவம்

சம்மர்ல சப்ஜா விதை சாப்பிடுங்க!

சம்மர் சோதனைகள் 

 அப்பாடான்னு இருக்க லீவு அப்படினு ஆரம்பிக்கும் போதே பரிட்சை அப்படினு சொல்லி படிக்கவைச்சி எழுதவைச்சி அப்பறம் தான் பாழாப்போன அந்த விடுமுறையா கொண்டாட விடுவாங்க. நிம்மதியா வீட்டுக்கு வந்த வந்ததும் பெற்றோர்கள் வெயில் அதிகம்பா வெளியப் போகக் கூடாது, ஊருக்கு போகக் கூடாது, என் வீட்டு மொட்டை மாடிக்கே போகக் கூடாதுனு சொல்லும் போது தான் நமக்கு தோணும் நமக்குள்ள லீவுயே விட்டிருக்க கூடாதுனு. அப்படிப்பட்ட ஒரு நேரம் தான் இந்த சம்மர் காலம் ஆகும்.

அப்பாடா அப்படினு தொலைக்காட்சியை போட்டு ஹாலிவுட் படங்களை பாத்தா வெள்ளைக்காரன் கடற்கரைல வெயில் வேணுன்னு படுத்துட்டு இருப்பான், சரி அதை பாத்ததான் கோவம் வருகிறதுனு மாத்துன பாட்டுலையும் வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே இதை கேட்டு அதை அமத்திட்டு வந்து, இதை பாக்குறீங்களா.. இதோ உங்களுக்குக்கான சூப்பர் டிப்ஸ்..

கடுகு சிறுத்தாலும் கரம் குறையாது : 

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. வேணுனா நீங்க சாப்பிட்டு பாருங்க, அதே மாதிரிதாக இதுவும் அளவுல பாத்தா ரொம்ப சின்னது ஒரு ஆளோட அளவ பாத்து கணிக்கக்கூடாதுனு சொன்னது சரிதாங்க நம்ம உபயோக படுத்தபோற பொருளும் அப்படிதாங்க, 

 சப்ஜா விதைகள் இல்லனா பாசில் விதைகள் இல்லனா பியூகமறியா விதைகள் இப்படிலாம் இதுக்கு நிறைய பெயர் இருக்குங்க. சரி இது எப்படி சம்மர்ல உபையோக படும்னு யோசிக்குறிகளா வாங்க பாப்போம் 

சப்ஜா பயன்கள் : 

 இந்த சப்ஜா விதைகளின் வரலாறு பாத்திங்கனா நாம் இப்போ வியந்து பாக்குற ஆயுர்வேத மருந்துகளிலும் மற்றும் சீனர்கள் உபயோக படுத்திய மருந்துகளிலும் இது காணப்படுகின்றது. 

சப்ஜாவில்லுள்ள சத்துக்கள் : 

  இந்த சப்ஜா விதைகளில் உள்ள சத்துக்களை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். சப்ஜா விதைகள் திருநீற்று பச்சிலை செடிகளில் இருக்கின்றது. இதனை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும்.

ஐயன் அல்லது இரும்பு சத்து :

 ஐயன் சத்து அதாவது இரும்பு சத்து என்று கூறப்படும் சத்துக்கள் நிறைந்து உள்ளது இந்த இரும்பு சத்து நாம் தினமும் உட்கொள்ளும் பொருட்களில் இருந்தால் மிக்க நன்று உதாரணமாக கீரைவகைகள், வெங்காயம் போன்றவை என் நாம் வெறுத்து ஒதுக்கும் பூண்டில் கூட நிறைந்து உள்ளதாம் இது இந்த சப்ஜா விதைகளிலும் நிறைந்து உள்ளதாம். இந்த இரும்பு சத்து இருந்தால்தான் இரத்தசோகை, இரத்த கம்மியாவது போன்றவற்றில் இருந்து காப்பாற்றி கொள்ளலாம். 

கால்சியம் சத்து : 

கால்சியம் சத்து மிகவும் முக்கியமான ஒன்று அது ப்ரோக்கோலி, ஆரஞ்சு பழங்கள்,  பாதம், பால் போன்றவற்றில் உள்ளது. இது பெண்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையாய் விளங்கும் எலும்பு தேய்மானம் மற்றும் பல் தேய்மானம் வராமல் தடுக்கின்றது. இதுவும் இந்த சப்ஜா விதைகளில் உள்ளது. 

மாற்ற நோய்கள் தவிர்ப்பு: 

இந்த சப்ஜா விதைகளில்  ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா -3, நார்ச்சத்து மற்றும் ப்ரோடீன்கள் உள்ளதால் அனைவர்க்கும் வரக்கூடிய தீவிர பிரச்னையான சக்கரைநோய், மாதவிடாய் பிரச்சனை போன்றவை சரியாகிறது. 

இப்போ சொல்லுங்க சப்ஜா விதைகள் சிறியதாக இருந்தாலும் அதன் பயன்கள் பற்பல. அதனால இனி வெயிலை பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், இதைச் சாப்பிடுங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும். முடிவுல ஒரு சின்ன நல்ல விஷயம், இது நம்ப குட்டி பசங்களுக்கு, அவங்களுக்கு ரொம்ப புடிச்ச மில்க் ஷேக்கு, கருப்பு விதைகள் தான் இந்தச் சப்ஜா விதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *