நவம்பரில் ஸ்வாமியை தரிசனம் செய்ய நிபந்தனையுடன் ஐயப்ப பக்தர்களுக்கு அனுமதி
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி ஐயப்பன் கோவிலில் பூஜைகள் நடைபெற திறக்கப்படும். இதுவரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.
ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் அக்டோபர் மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நவம்பரில் நடை திறக்கும் போது மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்ற தகவல் வெளியானது.
மேலும் துலாம் மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் அக்டோபரில் திறக்கப்படும் போதும் அவர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து தகவல் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதே நேரம் பக்தர்களுக்கு சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேரள தேவஸ்தனம் அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் இவ்வாறாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.