சபரிமலையில் ஆன்லைன் புக்கிங் தொடங்கியது இன்று முதல்
சபரிமலையில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்படுகிறது என்று அறிவிப்பு வெளியாகின. மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவிற்கு 5 ஆயிரம் பேர் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவிற்கு 5 ஆயிரம் பேர் தரிசிக்க அனுமதி
- வாரத்தின் இறுதி நாட்கள் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி
கானகப் பாதை வழியாக அனுமதி
மேலும் கானகப் பாதை வழியாக சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது சபரிமலை வட்டார பகுதியில் வசிக்கின்ற சமூகத்தினர் மற்றும் பாதை வழியாக சபரிமலைக்கு செல்ல சிறப்பு அனுமதி வழங்கியது கேரள அரசு.
இறுதி நாட்கள் 3 ஆயிரம்
திங்கள் முதல் வெள்ளி வரை 2,000 பேரும், வாரத்தின் இறுதி நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பேரும் தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி அளித்துள்ளன.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சபரிமலையில் இந்த ஆண்டு மகர விளக்கு மண்டல பூஜை விழாவை ஒட்டி குறைந்த அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.