உக்ரைனை விட்டு வெளியேறும் ரஷ்யர்கள்:- விரைவில் போர்..?
ரஷ்யர்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருவதால் உக்ரைனில் உச்சகட்ட பதற்ற நிலை நிலவி வருகிறது.
ரஷ்யா எல்லையில் வீரர்களை குவித்து வருவதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனைதொடர்ந்து ரஷ்யா கருங்கடல் மற்றும் உக்ரைனை சுற்றியுள்ள கடல்பகுதிகளில் கடற்பயிற்சி நடத்தவுள்ளதாகவும், இதனால் அந்த வழியாக எந்த கப்பல், மற்றும் விமானங்கள் சென்றால், வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சியால் சுட்டு வீழ்த்தப்படலாம் என ரஷ்யா ட்கூறியது.
இது தொடர்பாக உக்ரைன் கூறியதாவது, உக்ரைன் கடற்படையை ரஷ்யா முழுவதும் முடக்கியுள்ளதாக தெரிவித்தது. இதனையடுத்து இன்னும் ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்கர்கள் “அடுத்த 24 முதல் 48 மணி நேரத்தில்” உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைதொடர்ந்து, ஜப்பான், பிரிட்டன், நெதர்லாந்து, தென் கொரியா, நார்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களது குடிமக்களை உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. ஒருபடி மேல் உக்ரைனில் உள்ள தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் வெளியேற்றி வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய நாட்டின் தூதர்கள் மற்றும் ஊழியர்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக ரஷ்ய அரசு ஊடகமான RIA தகவல் தெரிவித்துள்ளது.
இதனால் ரஷ்யா விரைவில் உக்ரைனை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.