ஃப்ரூட்ஸ் வித் வெஜ் மிக்ஸ் சாலட் ரெசிபி.
ஆரோக்கிய உணவுகளில் முக்கிய இடம் பெறுவது சாலட். உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க கூடியது சாலட். நமக்குப் பிடித்த காய்கறிகளை பச்சையாக பிடித்த வடிவத்தில் கட் செய்து தயிருடன் கலந்து சாப்பிடலாம். ஆனால் ரஷ்யன் சாலட் மிகவும் ஆரோக்கியமானது. ஃப்ரூட்ஸ் வெஜிடபிள்ஸ் கலந்து செய்யக்கூடியது இந்த சாலட்.
ஃப்ரூட்ஸ் வித் வெஜ் மிக்ஸ் சாலட் ரெசிபி.
ரெஸ்டாரன்ட் உணவக மெனுக்களில் இந்த சாலட் ரெசிபி இடம் பெறும்.
வழக்கமான உணவுகளுடன் இந்த சாலட்டை சேர்க்கும் போது ஆரோக்கியமான சுவையான சாலட் ரெசிபி ஆக இருக்கும்.
இந்த சாலட் சாப்பிட்டாலே மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் ஏற்றதாக இருக்கும். ரஷ்யன் சாலட் ரெசிபி எளிதாக மற்றும் விரைவாக செய்யக்கூடிய சாலட் ரெசிபி ஆகும். இதை எந்த நேரத்திலும் உடனடியாக செய்து சாப்பிட முடியும்.
பிரேக் ஃபாஸ்ட் ஏற்ற ரஷ்யன் சாலட் ரெசிபி
தேவையான பொருட்கள்
கேரட் கழுவி நறுக்கியது கால் கப், பச்சை பீன்ஸ் நறுக்கியது கால் கப், மாதுளை விதைகள் ஒரு கப், அண்ணாச்சி நறுக்கியது ஒரு கப், தயிர் 4 ஸ்பூன், உருளைக்கிழங்கு வேக வைத்து நறுக்கியது அரை கப், இனிப்புச் சோளம் கால் கப், மயோனைஸ் இரண்டு ஸ்பூன், தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு தண்ணீர்.
செய்முறை விளக்கம்
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, இனிப்பு சோளம் இவற்றுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்து 10 நிமிடங்கள் மென்மையாகும் வரை வேகவிடவும். வேக வைத்த காய்கறிகள் குளிர்ந்ததும் நீரை வடிகட்டி எடுத்து வைக்கவும். வேக வைத்த தண்ணீரை சப்பாத்தி மாவு பிசைவதற்கு உபயோகப்படுத்தலாம்.
வடித்தெடுத்த காய்கறிகளை மயோனைஸ், தயிர் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் மாதுளை, அன்னாசி பழம் சேர்த்து நன்றாக கலக்கவும். பரிமாறும் முன்பு உப்பு, சர்க்கரை, மிளகு தூள் சேர்த்து கிளறி பரிமாறவும். நன்கு குளிர்ந்த பிறகு பரிமாறலாம். ஹெல்த்தி டேஸ்ட்டி சாலட் இப்போது உங்கள் வீட்டிலும் ரஷியன் சாலட் செய்து சாப்பிடலாம்.