ரஷ்யாவை கைவிட்ட சீனா..? கை கொடுக்குமா இந்தியா..?
பொருளாதார தடைகளை திணறி வரும் ரஷ்யா எண்ணெய் உற்பத்தியில் இந்தியா முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து உக்கிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் உக்ரைனை சேர்ந்த ஏராளமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் இந்தியா தனது நாட்டு குடிமக்கள் அனைவரையும் உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து மிட்டுள்ளதாகவும், இனி மீட்பு வாகனங்கள் இயக்கபடாது என்று தெரிவித்துள்ளது. இதனைதொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா ஒரு படி மேலே சென்று ரஷ்யா ஆயில் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பொருளாதாரத்தை சீர்செய்யும் நடவடிக்கையில், ரஷ்யா பொருளாதார நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவில் ஆயில் உற்பத்தியில் இந்தியா முதலீடு செய்ய வருமாறு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இருந்த போதிலும் அமெரிக்காவின் மன சங்கடத்திற்கு ஆளாக வேண்டும் என்பதால் இந்தியா இதற்கு ஒத்துழைக்குமாம என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கு 27 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க தயாரக உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அரிய வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.