செய்திகள்

புதிய ஏவுகணையை களமிறங்கிய ரஷ்யா..?

ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 4 வது வாரமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உகரைனில் உள்ள ஆயுதக் கிடங்கை அழிக்க ரஷ்யா நவீன ஏவுகணையை பயன்படுத்தியதாக கூறியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் நான்காவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக போராட 90 வயது மூதாட்டி ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதை உக்ரைன் பெருமையுடன் தெரிவித்தது. ரஷ்யா மீது சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் புகார் செய்த நிலையில், போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து உக்ரைனில் மறைந்து இருந்து ரஷ்யாவின் டேங்குகளை குறி வைத்து உக்ரைன் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் ஏராளமான ரஷ்யா டேங்குகள் ஜாக்லின் ஏவுகணை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு உக்ரைனில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கை, கின்சல் ஏவுகணை கொண்டு அழித்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் புதின் தனது தேசிய உரையில் வெளியிட்ட புதிய ஆயுதங்களின் வரிசையில் கின்சல் ஏவுகணையும் ஒன்றாகும்.

இந்த வகை ஏவுகணைகள் ஒலியை விட அதிவேகமாக செல்லக்கூடியவை, மேலும் வான் தடுப்பு சாதனங்களுக்கு டாட்டா காட்டி இலக்கை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டவை. “ஹைப்பர்சோனிக் ஏரோ பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்ட கின்சல் ஏவியேஷன் ஏவுகணை அமைப்பு என்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *