செய்திகள்

தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா:- கதறும் உக்ரைன் அதிபர்…!

ரஷ்யா வான்வெளி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் இப்போதாவது எதாவது செய்யுங்கள் என உக்ரைன் அதிபர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 11 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆரம்பத்தில் பொறுமை காட்டிய ரஷ்ய ராணுவத்தினர் தற்போது அதிரடி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் உக்ரைன் மீதான தாக்குதலின் போது ரஷ்யா பழைய விமானங்களை மட்டுமே பயன்படுத்துவதாகவும், இன்னும் புது தொழில்நுட்ப கொண்ட விமானங்களை ரஷ்யா பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனைதொடர்து பொதுமக்கள் பாதுகாப்பாக நகரை விட்டு வெளியேறும் வகையில், ரஷ்யா போர் நிறுத்தம் செய்தது. இந்நிலையில், “வான்வெளி ஏவுகணை தாக்குதல் மூலம் வினிஸ்டா விமான நிலையம் அழிக்கப்பட்டுள்ளது, என்றும், வான்வெளி தாக்குதல் மூலம் உக்ரைனை ரஷ்யா அழித்து வருகிறது” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலையுடன் தெரிவித்துள்ளார்.

தொடர்து பேசிய அவர், “உலக நாடுகள் ஏதாவது செய்ய வேண்டும். குறைந்த பட்சம் உக்ரைன் மீதான வான்வெளியை அனைத்து நாடுகளும் மூட வேண்டும்; அல்லது போரிட எங்களுக்கு போர் விமானத்தை கொடுக்க வேண்டும்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கதறியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *