அணு ஆயுத மும்முனை படைகள்’ தயார் ….
அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு, “புடினின் முடிவின் தொடக்கமாக இருக்கும்”: என பிரிட்டன் வெளியுறவு அமைச்சர், Liz Truss தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதல் தடுக்கப்படாவிட்டால், மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்; அது NATO-வை தலையிடச் செய்யும் ஆபத்திற்கு இட்டுச் செல்லும். என்றும், ஐரோப்பாவில், இந்த போர் பல ஆண்டுகள்’ நீடிக்கும் என்று அஞ்சுவதாகவும் Truss தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து அனைத்து துருப்புக்களையும் அகற்றும் வரை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது: புடின் கணித்ததை விட ரஷ்ய வீரர்கள் எதிர் தாக்குதல்களை எதிர்கொள்வதால், இந்தப் போரில் மிகவும் விரும்பத்தகாத வழிகளைப் பயன்படுத்த புடின் உறுதியாக இருப்பதாக, Truss அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அணு ஆயுத தற்காப்பு படைகள் தயாராக இருக்கும் படி அதிபர் புதின் உத்தரவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ்சின் கருத்துக்களுக்கு எதிர்வினையாக தான் அணு ஆயுதப் படைகளை ஆயத்த நிலையில் இருக்க ஆணையிட்டது ரஷ்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதனையடுத்து தரைவழி, நீர்மூழ்கி கப்பல் மற்றும் விமானங்கள் வழி, என ‘அணு ஆயுத மும்முனை படைகள்’ தயார் நிலையில் இருப்பதாக அதிபர் புதினிடம் ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.