ரோஹித் சர்மா நேற்று மருத்துவர்கள் தினம் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில் இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரியும் மருத்துவர்களின் தியாகத்தையும், துணிவையும் நாங்கள் அறிந்துள்ளோம்.
இவர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவதாகவும், மக்களிடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். தயவு செய்து அரசு அறிவித்த கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து மருத்துவர்களின் பணியை எளிமை ஆக்குங்கள் என்று குறிப்பிட்டு கூறினார்.
யுவராஜ் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும் போது தங்களுடைய உண்மையான கதாநாயகர்கள் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சமுதாயத்திற்காக நீங்கள் அர்ப்பணிப்போடு சேவை செய்வதால் உங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
நீங்கள் மக்களுக்காக கரிசனையோடு எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். நீங்கள் தன்னலமற்ற தன்மை, இரக்கம், அன்பு ஆகியவற்றின் உருவமாக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை இவ்வாறு பதிவிட்டுள்ளனர்.
நேற்று இந்தியா முழுவதும் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவரும் மருத்துவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.
மருத்துவ தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் பணியைப் பாராட்டும் வகையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா யுவராஜ்சிங் இவ்வாறு பாராட்டுக்களை தெரிவித்தனர்.