இன்று வெளியான வி திரைப்படத்தின் விமர்சனம்
வா ரே வா சூப்பரான ஓடிடி ரிலீஸ்!
5 செப்டம்பர் 2020 இன்று ரிலீஸான ‘வி’ படம் படு தூள். அமேசான் பிரைமில் நள்ளிரவு 12 மணிக்கு இப்படம் ரிலீஸானது. இந்த படத்தின் ரிலீசை ஒட்டி படத்தின் பட்டாளம் குரூப் செல்பி எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்தப் பதிவில் ‘வி தற்போது உங்களுடையது’ என குறிப்பிட்டிருந்தனர்.
கதைத் தளமும் விமர்சனமும்
தெலுங்கு திரைப்படம் பொதுவாக குடும்ப திரைப்படமாகவும் அல்லது சண்டை திரைப்படமாகவும் பெரும்பாலாக காட்சியளிக்க இத்திரைப்படம் மாறுபட்டு விளங்குகிறது. கலவரத்தில் ஆரம்பிக்கும் இத்திரைப்படம் அமைதியான சூழலில் முடிவடைகிறது.
இந்திய எல்லையில் நிலவி வரும் சூழ்நிலை அறிந்திருக்கும் இந்த சமயத்தில் நாட்டின் எல்லையில் தன்னலம் கருதாது பல சவால்களை எதிர்கொள்ளும் வீரர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை. நாட்டினுள் இருக்கும் பாலியல் பலாத்காரம் மத போராட்டங்கள் என பல பிரச்சனைகளிலிருந்து தன் குடும்பத்தைக் காக்க முடியாமல் இருக்கும் ராணுவ வீரரின் கோபம் இப்படம்.
சவாலாக துப்பு கொடுத்து கொலை செய்யும் கொலையாளி விஷ்ணுவையும் துப்பை துலக்கி சவாலை எதிர்கொள்ளும் போலீஸ் அதிகாரி ஆதியையும் சுற்றும் கதைத் தளம் கொண்டுள்ளது இத்திரைப்படம். கதைப் போக்கும் விதத்தில் இது கதாநாயகன் வில்லன் கதையாக இல்லாமல் இரு கதாநாயகர்களின் கதையாக அமைகிறது.
இரு கதாநாயகர்களுக்கு ஏற்ற ஜோடியாக சாஹிபா மற்றும் அபூர்வா எனும் இரு கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதாபாத்திரத்தை அமைத்துள்ளார் கதையின் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் மோகன கிருஷ்ணா இந்திராகாந்தி.
எலியை துரத்தும் பூனையின் ஓட்டமாக கதை இருந்தாலும்; விஷ்ணுவாக நானி ஆதியாக சுதீர் பாபு, சாஹி வாவாக அதிதி ராவ், அபூர்வாவாக நிவேதா தாமஸ் என முன்னணி கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களும் செம்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரவர் பணியை கனகச்சிதமாக நடித்துள்ளனர். எஸ் தமன் மற்றும் அமித் திர்வேதி தந்துள்ள இசை பாராட்டத்தக்கது.
நேச்சுரல் ஸ்டார் நானியின் 25வது படம் மாஸாக தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்ட பிஜிஎம் வேற லெவலாக இருந்தது. பலரின் ரிங்டோனாக இருக்கவும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு திரையுலகின் காமெடி நடகர் கிஷோர் குமார் மற்றும் நேச்சுரல் ஸ்டார் நானி சில காட்சிகளில் வார்த்தையால் புகுந்து விளையாடி இருக்கிறனர். காமெடி இல்லை என்ற வருத்தம் இல்லாமல் கதை நகர்கிறது.
மொத்தத்தில் ஓடிடியில் சமீபத்தில் வெளியான படப்பட்டியலில் இப்படம் யூகிக்கும் கதை தளத்தை கொண்டிருந்தாலும் சூப்பராக மக்களை எந்த விதத்திலும் ஏமாற்றாமல் சித்தரிக்கப்பட்டுள்ளது.