அரியவகை பறவையான ஹார்ன்பில் வேட்டையாடிய இளைஞருக்கு எதிர்ப்பு
இந்தோனேசியாவில் பாதுகாக்கப்பட்ட 14 பறவைகள் பட்டியலில் ஒன்றாக ஹார்ன்பில் பறவை ஒன்று இருந்தது. இதனை சிக்ரோ கொன்றதாக தகவல் வந்தது.
துப்பாக்கியுடன் அவர் புகைப்படத்தையும் இணைத்து. இந்த பறவைகள் பொதுவாக வடகிழக்கு இந்தியா மற்றும் பூட்டான் காடுகளிலும், தென் கிழக்கு ஆசிய பிரதான நிலப் பகுதிகளிலும் இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி பகுதியை தவிர கிரேட்டர் சுந்தாக்கள் பகுதிகளிலும் இருந்து வந்தன.

இந்நிலையில் இந்த பறவையை வேட்டையாடுவதற்காக இந்தோனேசியாவில் உள்ள வேட்டைக்காரர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்தோனேஷியா ஊடகம் வெளியிட்ட செய்தி என்னவென்றால் வேட்டையில் ஈடுபட்ட அந்த இளைஞர் போபியன் சிக்ரோ என்று அடையாளம் கண்டுபிடித்தனர்.
வனப் பகுதியில் புகுந்து வேட்டையாடிய ஹார்ன்பில் பறவையை தூக்கி காட்டியபடி பெருமிதமாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்ட பதிவில் இந்த காட்டில் உடனடியாக நுழைந்து இந்த பறவையை சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். இவர் கையில் ஒரு வேட்டையாடப்பட்ட ஹார்ன்பில் பறவை காட்சிப்படுத்தி உள்ளார்.
சிக்ரோ நீண்ட அலகு மிகப் பிரம்மாண்டமான இறகு என காட்சியளித்த இந்த வகை பறவைகள் பழவகைகளை உண்டு வாழ்ந்து வரக் கூடியவை.
மிக அழகான வண்ணங்கள் கொண்ட இந்த பறவை பார்ப்பதற்கே உற்சாகமாக இருக்கும் என கூறுகின்றனர். இந்த வகை பறவைகளை தமிழகத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் காணமுடியும்.

இந்தோனேஷியாவில் உள்ள காட்டுப் பகுதியில் காணப்படும். பெரிய பறவையே ஹார்ன்பில் அரியவகை பறவையான ஹார்ன்பில் வேட்டையாடி பேஸ்புக்கில் புகைப்படங்களை வெளியிட்ட இளைஞருக்கு எதிர்ப்பு தெரிவித்து நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது செயலுக்காக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.