ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறை

தீராத வினை தீர அஷ்டமியில் காலபைரவ அஷ்டகம்

சிவபெருமானின் அவதாரம் கால பைரவர் ஆவார். கால பைரவரின் வாகனம் நாய். பைரவ வழிபாடு தீராத வினைகளைத் தீர்க்கும், பயத்தை விரட்டி மன தைரியத்தை கூடவும் செய்யும். கால சர்ப்ப தோஷம் நாக தோஷம் போன்ற தோஷங்கள் பைரவர் வழிபாட்டால் நிவர்த்தியாகும்.

  • பைரவர் சிவபெருமானின் அவதாரம்.
  • பைரவருக்கு உகந்த அஷ்டமி திதி.
  • பைரவரை வழிபட காலபைரவர் அஷ்டகம்.
  • அஷ்டமியில் பைரவரை வழிபடும் முறை.

அஷ்டமி வழிபாடு

அஷ்டமி திதியில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும் ஐதீகம் இருக்கிறது. மேலும் கால பைரவரின் எட்டு வடிவங்களை அஷ்ட பைரவராக குறிப்பிடப்படுகிறது.

  • அசிதாங்க பைரவர்
  • ருரு பைரவர்
  • சண்ட பைரவர்
  • குரோதன பைரவர்
  • உன்மத்த பைரவர்
  • கபால பைரவர்
  • சம்ஹார பைரவர்
  • பீக்ஷன பைரவர்

கால பைரவரை லக்ஷ்மி கடாக்ஷ தன சொரூபமாக ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வழிபடுகின்றனர். அஷ்டமியில் பைரவரை வழிபட கால பைரவ அஷ்டகம்.

காலபைரவ அஷ்டகம்

தேவராஜஸேவ்யமாநபாவனாங்க்ரிபங்கஜம் 
வ்யாலயஜ்ஞஸூத்ரமிந்துசேகரம் க்ருபாகரம்  
நாரதாதியோகிவ்ருந்தவந்திதம் திகம்பரம் 
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம் 
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் | 
காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம் 
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||

சூலடங்கபாசதண்டபாணிமாதிகாரணம் 
ச்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் | 
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம் 
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||

புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்தசாருவிக்ரஹம் 
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் | 
வினிக்வணந்மனோஜ்ஞஹேமகிங்கிணீலஸத்கடிம் 
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கநாசகம் 
கர்மபாசமோசகம் ஸுசர்மதாயகம் விபும் | 
ஸ்வர்ணவர்ணசேஷபாசசோபிதாங்கமண்டலம் 
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||

ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம் 
நித்யமத்விதீயமிஷ்டதைவதம் நிரஞ்ஜனம் | 
ம்ருத்யுதர்பநாசனம் கராளதம்ஷ்ட்ரமோக்ஷணம் 
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||

அட்டஹாஸபிந்நபத்மஜாண்டகோசஸந்ததிம் 
த்ருஷ்டிபாதநஷ்டபாபஜாலமுக்ரசாஸனம் | 
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகந்தரம் 
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||

பூதஸங்கநாயகம் விசாலகீர்திதாயகம் 
காசிவாஸலோகபுண்யபாபசோதகம் விபும் | 
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம் 
காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே ||

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம் 
ஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் | 
சோகமோஹதைந்யலோபகோபதாபநாசனம் 
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம் ||

இதி ஸ்ரீமச்சங்கராசார்யவிரசிதம் காலபைரவாஷ்டகம்

பூஜை முறை

பொதுவாக அஷ்டமி திதியில் பைரவ வழிபாடு சிறந்ததாக இருந்தாலும் தேய்பிறை அஷ்டமிக்கு தனி சிறப்பு உண்டு. பைரவ வழிபாட்டிற்கு பிரசாதமாக உளுத்தம் பருப்பு வடை நிவேதனம் செய்யலாம். கோவிலில் இருக்கும் பைரவருக்கு வடை மாலை சாற்றலாம். பைரவருக்கு வெள்ளை பூசணியில் விளக்கேற்றுவது தேங்காயில் விளக்கேற்றுவது போன்றவை தோஷ நிவர்த்தி பரிகாரங்களாக செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *