செய்திகள்தேசியம்

சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளன்றாவது அவரை நினைவு கூறுங்கள்

சுவாமி விவேகானந்தர் என்ற உடன் ‘சகோதர சகோதரிகளே’ என்ற அவரின் சிகாகோ சொற்பொழிவு தான் ஞாபகத்திற்கு வரும்.

இந்திய தேசத்தின் முக்கியமான துறவி சுவாமி விவேகானந்தர் 4 ஜூலை 1902ல் இயற்கை எய்தினார்.

வேதாந்தத்தின் விளக்கம்

சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தை பின்வருமாறு சுருக்கமாகக் கூறி, அதற்கு நவீன மற்றும் உலகளாவிய விளக்கத்தை அளித்துள்ளார்

Each soul is potentially divine. The goal is to manifest this Divinity within by controlling nature, external and internal. Do this either by work, or worship, or mental discipline, or philosophy—by one, or more, or all of these—and be free. This is the whole of religion. Doctrines, or dogmas, or rituals, or books, or temples, or forms, are but secondary details.

[ஒவ்வொரு ஆத்மாவும் தெய்வீகமானது. இயற்கையையும், வெளிப்புறத்தையும், அகத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே குறிக்கோள். இதை வேலை, அல்லது வழிபாடு, அல்லது மன ஒழுக்கம், அல்லது தத்துவம் ஆகியவற்றில் ஒன்றை அல்லது அதற்கு மேற்பட்டவை அல்லது இவை அனைத்தினாலும் செய்யுங்கள் – சுதந்திரமாக இருங்கள். இது முழு மதமும்.கோட்பாடுகள், சடங்குகள், புத்தகங்கள், கோயில்கள், வடிவங்கள் இரண்டாம் விவரங்கள்.]

மோட்டிவேஷன்

இவரின் வார்த்தைகள் அனைவருக்கும் உற்சாகத்தை தரக்கூடியது. குறிப்பாக நாட்டின் இளைஞர்களுக்கு உத்வேகத்தையும் அளித்து ஒருவிதமான தனி எனர்ஜியை கொடுத்து செயல்பட வைக்கிறது. சில குறிப்பிடத்தக்க வாழ்க்கைக்குத் தேவையான மோட்டிவேஷனல் கோட்ஸ்

Arise,awake and donot stop until the goal is reached.

இலக்கை அடையும் வரை எழுந்து, விழித்திருந்து, நிறுத்த வேண்டாம்.

You have to grow from the inside out. None can teach you, none can make you spiritual. There is no other teacher but your own soul.

நீங்கள் அகத்திலிருந்து வளர வேண்டும். யாரும் உங்களுக்கு கற்பிக்க முடியாது, உங்களை யாரும் ஆன்மீகமாக்க முடியாது. உங்களின் ஆத்மாவைத் தவிர வேறு ஆசிரியர் இல்லை.

பல ஊக்குவிக்க மேற்கோள்கள் இருப்பினும் இவை இரண்டை மட்டும் குறிப்பிட்டதற்கான காரணம் ஒவ்வொரு தனிநபருக்கும் அவசியமான பொதுவான வழிகாட்டி. எந்தவித மதத்தை சார்ந்து மனிதனாக இருந்தாலும் ஆன்மீக இறை நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதே போல் அனைவருக்கும் லட்சியம் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். ஆகையால் இந்த இரு மேற்கோள்கள் வாழ்க்கையில் அத்தியாவசியமான ஒன்றாக திகழ்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *