நினைவு நாளில் நினைவு கூறுங்கள் பாரதியை
பாரதியார்! மகாகவி சுப்பிரமணிய பாரதியார்!
இவருக்கு அறிமுகம் என்று ஒன்று தேவையா! அப்படித் தேவைப்பட்டால் நாம் தமிழரா! என்று வினா எழுப்பினாலும் இவரைப் பற்றிப் படித்தாலும் சரி இவர் எழுத்தை படித்தாலும் சரி திகட்டாது.
11 டிசம்பர் 1982 ல் எட்டையபுரத்தில் பிறந்தார் பாரதியார். பாரதியார் யார்? என்றால் எழுத்தாளர் கவிஞர் பத்திரிகையாளர் சமூக ஆர்வலர் இந்திய சுதந்திர தியாகி என அடுக்கிக்கொண்டே போகலாம்.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ
புரட்சி என்ற சொல்லிற்கு இலக்கணம் வகுத்தவர். பெண்களும் புரட்சியில் இறங்கத் தொடங்கியது இவரால் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் பெண்கள் இறங்கும் புரட்சி முரண்பாடாக அமைவதுதான் கஷ்டமாக இருக்கிறது.
14 மொழிகள் தெரிந்து இருந்தாலும் தமிழின் மீது அளவிலாத பற்றுடையவர். அதனாலோ தமிழர்களுக்கும் இவர் மீது அளவில்லா பற்று உடையவராக திகழ்கிறார்கள்.
பாரதியார் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியதில் ஒவ்வொரு சொல்லை கேட்கும் பொழுதும் அனைத்து தமிழர்களும் வீரர்களாக உணர்ச்சி பொங்க திகழ்கிறார்கள். முறுக்கு மீசை கவிஞர் முண்டாசுக் கவிஞர் மகாகவி பாரதி கதாநாயகராக திகழ்கிறார்.
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் - இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
11 செப்டம்பர் 1921 மதராசப் பட்டினத்தில் இயற்கை எய்தினார். பாரதி ஒவ்வொரு வீட்டின் ஆண் குழந்தை பெண் குழந்தை என்று பாலினம் பாராமல் வளரத் தொடங்கினார். தமிழர்களின் நாடி நரம்பில் ரத்த சொட்டுகளில் அவரவர் அறியாமல் தன்னகத்தே இருக்கும் புரட்சி பாரதி. அவரின் நினைவு நாளில் அனைவரும் நினைவு கூறுவோம்.