ஆரோக்கியம்குழந்தைகள் நலன்சமையல் குறிப்புமருத்துவம்யூடியூபெர்ஸ்

உங்க குழந்தை சாப்பிடவே மாட்டேங்குதுனு கவலையா!! இத செஞ்சி பாருங்க அடம்பிடிக்காம டக்குனு சாப்பிடுவாங்க

வீட்டில் உள்ள குழந்தைகளை சாப்பிட வைப்பது என்பது ஒரு பெரிய மலையை தூக்கும் செயல் போல் இருக்கும். சாப்பிடுவதற்கு மட்டும் குழந்தைகள் அவ்வளவு அடம்பிடிப்பார்கள். அந்த காலத்தில் குழந்தைகளுக்கு நிலா சோறு காட்டி ஓட்டுவார்கள் இந்த காலத்தில் செல்போனை காட்டி ஓட்டுகின்றன வித்தியாசம் இதுதான் ஆனால் குழந்தைகள் சாப்பிடுவது என்னும் மாறவே இல்லை என்னதான் நிலாவையும் போனையும் காட்டினாலும் அவர்கள் வயிறார சாப்பிடுவதே இல்லை. இவ்வாறு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட வைக்க என்ன செய்வது என்று அறியாமல் குழம்பிப் போயிருக்கும் வீட்டில் உள்ள பெண்களுக்காக ஒரு எளிய டிப்ஸ் இது டிப்ஸ் என்று சொல்வதை விட ஒரு அறிய மருந்து என்று சொல்லலாம் இதனை செய்து பாருங்கள் உங்கள் குழந்தைகள் அடம் பிடிக்காமல் வயிறார சாப்பிடுவார்கள்..

செய்முறை

சுக்கு,மிளகு, ஏலக்காய்,திப்பிலி,சீரகம் ஆகிய 5 வகையான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்களை வாணலியில் போட்டு சிறிது வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடிக்கு சரி சமமாக பனை வெல்லம் அதில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பின்பு இந்த பொடியில் 2 சிட்டிகை எடுத்து அதில் தேன் கலந்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.

எப்பொழுதும் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இதை கொடுத்தால் அதன் பின்பு நன்றாக சாப்பிடுவார்கள். உங்கள் குழந்தைகள் என்றும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.சாப்பிடவே சாப்பிடாத குழந்தைகள் கூட வயிறு நிறைய சாப்பிட தொடங்கி விடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *