வயிற்றுக்கு செய்யும் பயறுகளின் வைத்தியம்..!!
நம் குடுப்பதிற்கு என்று இல்லாமல், தனக்காகவும் வாழ கற்று கொள்ளும் ஒவ்வருவரும் குடும்பத்தின் ஆணிவேராக இருப்பார்கள். தன்னை கவனித்து கொள்ள தெரிந்தால் மட்டுமே, பிறரையும், நம் குடும்பத்தையும் கவனித்து கொள்ளும் தகுதியை நாம் பெறுகிறோம்.
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் விளைவிக்கபட்டு வந்தது தான் இந்த பயறு வகைகள். பின்னர் தெற்கு, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டன. சர்க்கரை நோய் மற்றும் அல்சர் உள்ளவர்கள் அடிக்கடி பசி எடுக்கும். இவர்கள் எண்ணெய் பதார்த்தங்கள், பிஸ்கட் போன்ற உணவுகளுக்கு பதிலாக இந்த பயறுகளை சேர்த்து கொள்ளலாம். மாலை நேரங்களில் இந்த பயறு ஸ்னாக்ஸ் உடலுக்கு நல்லதாக அமையும்.
வாய்வு தொல்லையும் இருக்காது
மூலம், ஆசனவாய் கடுப்பு, போன்ற பிரச்னையை போக்க பாசிப்பயறு, மணத்தக்காளி கீரையை கூட்டு செய்து சாப்பிடுவதால் வெயிலினால் ஏற்படும் சூடு தணிவதோடு இந்த பிரச்சனையும் குறையும். பயறுகளை முளை காட்டி சாப்பிடும் போது சத்து கிடைப்பதோடும், வாய்வு தொல்லையும் இருக்காது. இந்த முளை பயறுகளில். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவர்க்கும் ஏற்றதாக இருக்கும்.
வயிறு கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயறு வேக வாய்த்த தண்ணிரை அருந்த குணமாகும். முளை கட்டுவது பெரிய டிபார்ட்மெண்டில் கிடைக்கும். கடைகளில் வாங்காமல் நமே சுலபமாக வீட்டில் செய்து வைத்து கொள்ளலாம். தயாரித்த பயறை பிரிஜில் வைத்து மூன்று நாள் கெடாது. காலை பயறை ஊற வைத்தால் இதை இரவில் நீரை இருந்து ஒரு துணியில் கட்டினால், மறுநாள் முளை கட்டி விடும்.
பச்சைப்பயறு, கொள்ளு, தட்டை பயறு, கருப்பு சுண்டல், வெந்தயம், கோதுமை அனைத்தும் இந்த மாதிரி செய்வதால் எளிதில் முளை கட்டி விடும். கோதுமை, சுண்டல் மட்டும் இருபத்தி நான்கு மணி நேரம் ஆகும். முளைகட்டிய பயறுகளை குழம்பு, கிரேவி, தாளித்த பருப்பாகவோ அல்லது பச்சை யாகவோ, எப்படி வேனாலும் சாப்பிடலாம். வாரம் மூன்று முறை இதை சேர்த்து கொள்ள, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
சிறந்த மருத்துவ பொருளாகும்
சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்க்கு பாசிப்பயறு நல்லது. டைபாய்டு, காலரா, மலேரியா போன்ற நோயை குணப்படுத்த பாசிப்பயறு சிறந்த மருத்துவ பொருளாகும். மலச்சிக்கல், பித்தத்தை போக்க பாசிப்பருப்பு, அரிசி, போட்ட பொங்கல் சாப்பிடலாம். நினைவு திறனை மேம்படுத்த வல்லாரை, பாசிப்பருப்பு கூட்டு செய்து சாப்பிடவும். முளைகட்டிய பாசிப்பயறு வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட அல்சர் சரியாகும்.
நல்ல ஊட்டச்சத்து
பொடுகு தொல்லை நீங்கவும். சருமம் பளபளப்பாக இருக்க பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம். இளம் குழந்தைக்கும், கர்ப்பிணிகளுக்கு, பருவ பெண்கள் இந்த பாசிப்பருப்பை உணவில் சேர்த்து கொள்ள நல்ல ஊட்டச்சத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி, டான்ஸ் பயிற்சிக்கு இது சிறந்த ஊட்டச்சத்தாகும். லைசின், அமினோ ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி, சி , போலேட் அதிகம் உள்ளது.