மீண்டும் முந்தானை முடிச்சா!
முந்தானை முடிச்சு படம் ரீமேக் செய்யப்படப்போகிறது. சூப்பரான திரை பட்டாளத்துடன் இந்த படம் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.
1983ல் போட்ட முடிச்சு இன்றுவரை கழலாமல் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் படம் முந்தானை முடிச்சு. கே. பாக்யராஜ் இயக்கி ஊர்வசியுடன் இணைந்த நடித்த படம் முந்தானை முடிச்சு.
சமீபத்தில் இயக்குனர்கள் கே. பாக்யராஜ் மற்றும் சசிகுமார் இருவரும் இணைகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இன்று முழு விவரங்களும் சமூக வலைத் தளத்தில் வெளியானது.
சசிகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 37 வயதாகியும் முடிச்சு கழலாமல் கெட்டியாக இருப்பதாகவும் தமக்குப் பிடித்த இயக்குனரின் படத்தின் ரீமேக்கில் தாம் ஒரு பங்காக அவரோடு இணைந்து வேலை செய்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
சசிகுமாருடன் இணையும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவார். சமீபத்தில் இவருடைய இருபத்தைந்தாவது படத்தின் தலைப்பு சமூக வலைதளங்களில் வெளியானது. தமிழ் திரையுலகில் பட்டையைக் கிளப்பி வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-ஆவது படம் பூமிகா. அதனைத் தொடர்ந்து தற்போது முந்தானை முடிச்சு ரீமேக்கில் இணைந்துள்ளார். இதனை மிகுந்த சந்தோஷத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜே எஸ் பி பிலிம் ஸ்டூடியோஸின் ஜே எஸ் பி சதீஷ் தயாரிப்பில் வெளி வர இருக்கும் முந்தானை முடிச்சு கதை திரைக்கதை வசனம் கே. பாக்யராஜ் கொடுக்க சசிகுமார் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இப்படத்தை கே. பாக்யராஜே இயக்குகிறாரா அல்லது வேறு இயக்குனரா என்ற விவரங்கள் கூடிய விரைவில் சொல்லப்படும்.
சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ், கே. பாக்கியராஜ் மற்றும் ஜே எஸ் பி சதீஷ் இணைந்த புகைப்படத்துடன் முந்தானை முடிச்சு ரீமேக் செய்யப்படுகிறது என்ற செய்தி வெளியானது. மேலும் அந்த பதிவில் 1983 ஏவிஎம் தயாரிப்பில் வெளியான படம் 2021ல் ஜே எஸ் சி தயாரிப்பில் வெளியாகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். பிரதான முன்னணி இயக்குனரான கே. பாக்யராஜ் இருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பாக்கியராஜின் குறும்புத்தனமான கதைக்களம் சசிகுமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் தனித்துவமான நடிப்பு இந்தப் படத்தை வேற லெவல் சூப்பர் ஹிட் படமாக வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. சமூக வலைதளங்களில் இன்று வெளியான இந்த செய்திக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.