குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ரிலாக்சாக
வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு படிக்கும் போது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அவர்களுக்கு முதுகு வலி உண்டாக நேரிடலாம். இது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே படிக்கும் போது குழந்தைகளை நேராக உட்கார்ந்து படிக்க பழக்கப்படுத்துங்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகு மற்றும் கழுத்து வலியை தடுக்க முடியும்.
அடம்பிடித்த குழந்தைகள்
பள்ளிக்குச் செல்லும் வரை எல்லா குழந்தைகளும் ஒழுங்காக படித்துக் கொண்டுதான் இருந்தனர். வீட்டிலேயே இருப்பது அவர்களின் படிபார்வம் குறைக்க வாய்ப்புகள் அதிகமாக ஏற்படுகிறது. எனவே உறங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்த, கற்றல் முறையை எளிதாக்க உதவி செய்ய வேண்டும். குழப்பமான வீடுகளும், சுற்றுப்புறம் உங்களது மனச்சோர்வின் வாய்ப்புகளை அதிகரிக்க கூடும். உங்கள் குழந்தைகள் படிக்கும் போது வீட்டை அமைதியாக வைத்துக் கொள்வது அவசியம்.
குழந்தைகள் டிவி, மொபைல்
அவர்களைச் சுற்றி அமைதியான சூழலை உருவாக்கி மன ஆரோக்கியத்தை பேண வேண்டும். பள்ளிக்குச் செல்லும் போது குழந்தைகள் அதிகமாக டிவி பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தற்போது குழந்தைகள் சதா டிவி, மொபைல் என்று உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இது அவர்கள் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு கண்களை பிரச்சினையை உண்டாக்க காரணமாகும்.
நீங்களும் மொபைல், டிவியிலேயே மூழ்கி இருக்காமல் இருக்க வேண்டும். குழந்தைகளின் டிவி திரையில் இருக்கும் நேரத்தை குறையுங்கள். வீட்டிலேயே இருந்து அனைத்து வேலைகளையும், குடும்பத்தையும் நிர்வகிப்பது, எரிச்சலை தரக்கூடும். இதன்படி பெற்றோர்கள் வெளிப்படுத்தும் மன அழுத்தம், குழந்தைகளையும் பாதிக்கும். தொழில்சார் சுகாதார உளவியல் இதழ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
விளையாட்டு நேரத்தை திட்டமிட்டு கொடுங்கள்
எனவே குழந்தைகளிடம் எப்போதும் பொறுமையுடனும், நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அமைதியாக அவர்களை கையாள முயற்சி செய்யுங்கள். தினசரி நிலையான வழக்கத்தை நீங்கள் பின்பற்றினால் நல்ல மாற்றத்தை அவர்களிடம் நீங்கள் காணமுடியும். சரியான அட்டவணையை உருவாக்கி அதில் சரியான படிப்பு நேரம், உணவு நேரம் மற்றும் விளையாட்டு நேரத்தை திட்டமிட்டு கொடுங்கள்.
இது அவர்களின் செயல்பாடு, முடிவெடுக்கும் திறன் என எல்லாவற்றையும் அதிகரிக்க வாய்ப்பாக இருக்கும். பள்ளிக்கு செல்லும் வரை ஒவ்வொரு மணிநேரமும் என்ன செய்ய வேண்டும். என்று அந்த கால அட்டவணை தற்போது அவர்கள் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை. இந்த கால அட்டவணை அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்
குழந்தைகள் அறிவாற்றல் செயல்பாடுகளும் அதிகரித்து வருவதால் வீட்டிலிருக்கும் உங்கள் குழந்தைகளை இப்படி பிஸியாக உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கொள்கை எப்படி ஜாலியாக, கொரோனா பற்றிய பயம் எரிச்சலை எப்படி குறைப்பது. குழந்தைகளின் மனச் சோர்வை போக்கி, குதூகலமாக பெற்றோர்கள் இதோ உங்களுக்கான இந்த வழிகளை பின்பற்றினாலே, குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ரிலாக்சாக இருப்பார்கள்.
பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்த குழந்தைகள் எப்ப பள்ளிக்கூடம் திறக்கும் என்று கேட்கும் அளவிற்கு, பூரண உடல் ரீதியாக மட்டுமல்லாமல், உணர்வுரீதியாகவும் நம்மிடம் விளையாடி விட்டது. கொரோனா பற்றிய பயம், மன அழுத்தம், குழந்தைகளை படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் செய்துவிட்டது. எனவே குழந்தைகளை சமாளிக்க முடியலைன்னா இதையெல்லாம் ட்ரை செய்து பாருங்கள்.