செய்திகள்தமிழகம்தேசியம்

அடங்கி வரும் கொரோனா ஆட்டம் அப்படா பெருமூச்சுவிடும் மக்கள்

#கொரோனா #இந்தியா

நாடு முழுவதும் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் கொரோனா பாதிப்பிலிருந்து சிகிச்சை முடிந்து குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பெங்களூரில் மட்டும் சுமார் 5062 பேர் கருணா பாதிப்பிலிருந்து குணமாகி சிகிச்சை முடிந்து வீட்டுக்குச் செல்கின்றனர். இதே போன்று கேரளாவில் இன்று மட்டும் 800 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 852 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா செயல் இழந்து மக்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.

இது இந்தியாவிற்கு சாதகமான காலம் நமது பருவநிலை மாற்றம் மற்றும் சூழலியல் சிகிச்சைகள் அனைத்தும் செயலிழக்க செய்திருக்கின்றது என்று வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ மக்கள் குணமாகி சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தாள் போதும்டா சாமி என இருக்கின்றனர். நாடு நல்ல நிலைக்குத் திரும்ப வர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து மக்களுக்கு அறிவுரையும் சுகாதார விழிப்புணர்வு அரசு கொடுத்து வந்தால் என்னும் மக்களுக்குப் பாதுகாப்பு என்ற ஒரு சிந்தனை சரியாக இருக்கும் சுகாதாரத்தை பேணி பாதுகாப்பார்கள் என்று நம்பப்படுகின்றது. ஆரோக்கியமான உணவு, அளவான அடிப்படை உடற்பயிற்சி இருந்தால் கொரோனாவை “கோ”சொல்லி அனுப்பலாம்.

இது ஆட்கொல்லி நோயால்ல நமக்கு ஆட்டம் காட்ட வந்த நோய் இதன் வீரியம் இந்திய சீர்தோசன நிலைக்குத் தாங்காது. இந்திய மக்கள் உடல் நிலையும் வலிமையானது. ஃபாஸ்ட் புட் கல்ச்சர், இன்ஸ்டண்ட் மற்றும் பிரிஜ்ஜில் வைத்துப் பிரசர்வேட்டிவ் செய்து சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால் இந்தியாவை எந்த நோயும் அண்டாது. கம்மங்க்கூழ், ராகி கூழ், தானிய ஹெல்த் மிக்ஸ் நாட்டுக்காய்கறிகள் சாப்பிட்டு வந்த பாரம்பரியம் நம்முடையது ஆனால் காலமாற்றத்தால் கண்டதை கணட நேரத்தில் சாப்பிட்டு வருகின்றோம். இன்று வரும் போகும் நோய்கள் எல்லாம் நம்மை வாட்டி வதைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *