டெக்னாலஜி

ரெட்மி நோட்6 ப்ரோ இந்தியாவில்

ரெட்மி  இந்திய சந்தையில் கலக்க வருகின்றது. ரெட்மியின் அடுத்த அதிரடி வெளியீடான ரெட்மி நோட் 6 புரோ  சந்தையின் புதியதாக வரவுள்ளது குறித்து ஏற்கனவே அறிந்திருந்திருந்தோம். 

4 ஆண்டுகளுக்கு முன் எம்ஐ3 என்ற ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்து இந்திய சந்தைக்குள் நுழைந்து செயல்பட தொடங்கியது. 

இந்தியாவில் விலை மற்றும் பயன்பாட்டு தரத்தில் மிடில் கிளாஸ் மக்களை கவர்ந்து சியோமி நிறுவனம் வளர்ந்து வந்தது, இன்று அபரிதமான வளர்ச்சியினை குறைந்த காலத்தில் பெற்றது. 

ரெட்மியின் பயன்பாடு அதன் கவர்ச்சியான விலை மற்றும் எளிய பயன்பாட்டு களம் காரணமாக இந்தியாவில் 35% மக்களின் பயன்பாட்டில் ரெட்மியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ரெட்மிக்களின் உலா:

இந்தியாவில் வெற்றிகரமாக வளர்ந்து வரும் ரெட்மி  இதுவரை ரெட்மி 4, ரெட்மி 5, ரெட்மி 5 ப்ரோ மாடல்கள் சந்தையில் கலக்கி வந்தது. இதனையடுத்து ரெட்மி நோட் 6 ப்ரோ இந்தியாவில் அறிமுகப் படுத்தவுள்ளனர். 

சியோமி துணை  தலைவர் மற்றும் இந்திய நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின் நவம்பர் 22 ஆம் தேதி ரெட்மி 6 ப்ரோ அறிமுகமாகவுள்ள செய்தியை அறிவித்தார். மேலும் ரெட்மி நோட் ப்ரோ 6  சந்தையில் வெளியீட்டிற்கான கவுண்டவுன் பக்கத்தையும் பதிவிட்டுள்ளார். 

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ செப்டம்பர் மாதம் நோட் 6 ப்ரோ -4 ஜிபி ரேம்/64 ஜிபி வேரியண்ட் தாய்லாந் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

தாய்லாந்தின் அறிமுக விலை டி,ஹெச்.பி 6,990 ஆகும். இந்திய மதிப்பின்படி ரூபாய் 15,300 ஆகும். 

இன்னும் 5 நாட்களில் ரெட்மி தகவல்கள் கிடைக்க பெறலாம். மேலும்  இந்தியாவில் அதன் விற்பனை தேதியும் அறிவிக்கப்படும். 

ரெட்மியின் சிறப்பு அம்சங்கள்:

6.26 இன்ச் ஹெ. டியுடன் திரையானது19.9 வீதத்தில் இருக்கும். 

கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்படும். 

14என்எம் அக்டோ-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஒசி

அட்ரினோ 509 ஜிபுயு

4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ்

இரண்டு கேமாராக்கள் கொண்டது. 

4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டவை ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *