தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்
கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்து மக்களை தாக்குவது கனமழை. ‘கொஞ்சம் கேப் விடுங்கப்பா’ என்றும் கெஞ்சும் மக்களின் நிலைமையை பாருங்கள்.
ஆங்காங்கே பேய் மாதிரி அடித்து பெய்து வரும் கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வர மக்கள் திண்டாடுகின்றனர். வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற தத்தளிக்கும் முதல் உதவியாளர்களும் பேரழிவு மேலாண்மை தொண்டர்களும் அச்சச்சோ! 2020ல் நான்கு மாதங்கள் மீதம் இருக்க பார்ப்பதற்கு இன்னும் என்னென்ன இருக்கிறது!
வடமாநிலங்களில் அடித்துப் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு தத்தளிக்கிறது. இப்பொழுது அந்த கனமழை தெற்கு பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சில இடங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
வடக்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் பரவலாகப் பல இடங்களில் மழை பெய்து வந்தாலும் கர்நாடகா கேரளா மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் கனமழையும், ஆந்திரா தெலுங்கானா உத்தரபிரதேசம் மாநிலங்களில் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், தமிழகத்தில் நீலகிரி மாவட்டங்களில் அதிகன மழையும், கோவை தேனி மாவட்டங்களில் மிக கன மழையும், திருவள்ளூர் கிருஷ்ணகிரி வேலூர் திண்டுக்கல் குமரி நெல்லை மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாளாக மழை பெய்து வர அந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் வழங்கியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் நான்கு நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனாவால் ஊரடங்கு இடப்பட்டு வெளியில் நகர முடியாத இருக்கும் இந்த நிலையில் வெள்ளம் அடித்துக் கொண்டு போனால் என்ன செய்வது? அரசு தகுந்த முன்னேற்பாடுகளும் நடவடிக்கைகளும் மக்களுக்காக எடுக்கவேண்டும். அனைத்து மக்களும் தகுந்த பாதுகாப்புடன் இருங்கள்.