மனிதர்களிடத்தில் கொரோனா தடுப்பூசி covaxin பரிசோதனை செய்ய பரிந்துரை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை தடுப்பதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனமும் என்ஐவி இணைந்து உருவாக்கி தடுப்பூசியை தயாரித்து பரிந்துரை செய்துள்ளது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகமும் இந்த பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்கு செலுத்தப்பட்டது. வெற்றி கிடைத்த உடன் அடுத்தக்கட்ட சோதனைக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் புனேவை சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வந்த கொரோனா தடுப்பூசி ஆன covaxin ஐ மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய பரிந்துரைத்தது.
ஒரு மருந்தை கண்டுபிடிக்கப்பட்டால் அனைத்து சோதனைகளும் செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டு வரும். அவ்வாறு பல மருந்துகளும், கொரோனாவிற்கான மருந்துகளும், சோதனை செய்த பிறகே பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் கொரோன வைரஸ் ஐ குணப்படுத்துவதற்கான மருந்துகளையும், இதுவரை எந்த ஒரு நாடும் கண்டுபிடிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியது குறிப்பிடத்தக்கது.
தற்போது கண்டுபிடித்துள்ள covaxin தடுப்பூசியை மனிதர்களுக்கு பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.