சிறுதானிய வரகரிசி பொங்கல்
சிறுதானியங்களில் வரகு அரிசியும் ஒன்று. வரகு அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து ஒரு பங்கிற்கு நான்கு மடங்கு வரை தண்ணீர் வைத்து வேக வைத்து சாப்பிடலாம். உபரி அதிகமாவதுடன் டேஸ்ட் ஆகவும், உடலுக்கு சத்தாகவும் இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வரகரிசி சாப்பிடலாம். சிறுதானிய வரகரிசி பொங்கல்.
வரகு அரிசி பொங்கல்
தேவையான பொருட்கள்
ஒரு டம்ளர் வரகு அரிசி, அரை மூடி தேங்காய் பால் எடுத்து வைக்கவும். பாசிப்பருப்பு 25 கிராம், இஞ்சி சிறிய துண்டு, சீரகம் அரை தேக்கரண்டி, மிளகு 10, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிது, நெய் 2 தேக்கரண்டி, உப்பு தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
அரிசி, பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி ஊறவைத்து, தேங்காய் பாலுடன் சேர்த்து பொடித்த இஞ்சி, உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கவும். சூடு ஆறியதும் குக்கரை திறந்து கரண்டியில் கிளறி விடவும். சிறு வாணலியில் நெய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து பொங்கலில் கலந்து கொள்ளவும். டேஸ்டான வரகு அரிசி வெண்பொங்கல் சூடாக தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.