அவல் சர்க்கரை பொங்கல்
கடை பதார்த்தங்களை விட வீட்டிலேயே பலகாரங்களை செய்து அந்த காலத்தில் கொடுத்தனர். அந்த காலத்தில் கடை பதார்த்தங்களை வாங்குவது போன்ற பழக்கங்கள் இல்லை. எளிதாக செய்யக்கூடிய அவல் வைத்து சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அவல் சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
கால் கிலோ அவுல், அரை மூடி தேங்காய் துருவல், வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு கால் கப், காய்ச்சிய பால் அரை டம்ளர், நெய் 5 ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் பொடி செய்தது 150 கிராம், பேரிட்சை கட் செய்தது சிறிது. ஏலக்காய் பொடி அரை ஸ்பூன், காய்ந்த திராட்சை 10.
செய்முறை விளக்கம்
அவலை தண்ணீரில் கழுவி இறுத்து எடுத்து வைக்கவும். இதில் பால் கலந்து ஊற விடவும். நன்கு ஊறிய பிறகு வாணலியில் நெய் விட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, பேரிச்சை, திராட்சை, தேங்காய் துருவல், ஏலக்காய்த் தூள் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வதக்கி இவற்றை அவலுடன் கொட்டவும். கடைசியாக மசித்த பாசிப்பருப்பை சேர்த்து தேவையான அளவு நெய் விட்டு கிளறினால் சுவையான இனிப்பு அவல் பொங்கல் தயார்.