ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

கொரோனாவில் இருந்து மீள இந்த மூன்று கருத்துக்களை படிங்க-2

சென்னையை  சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதை போன பதிவின் தொடர்ச்சியை பகிர்ந்துகொள்கிறார். இந்த கருத்தை பேஸ் புக்கில் பகிர்ந்துள்ளார்.

8ம் நாள் உடல்வலி குறைய தொடங்கியது. ஆனால் உடல் பதட்டப் படுவது நிற்கவில்லை. உள்ளே குளிரும் வெளியே வேர்வையும் ஒருவிதமான புதிய உணர்வை ஏற்படுத்தியது. பின் என் மருத்துவ நண்பர் அதை பயம் என்றார். நான் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது என முடிவெடுத்து பரிசோதனை செய்துகொண்டேன்.

(அதுவரை நான் மருத்துவமனை செல்லவில்லை, அதற்கு காரணம் என்னால் இந்த நோயை வெற்றி கொள்ள முடியும் என்று இருந்த நம்பிக்கை, மற்றொன்று மருந்தில்லாத ஒரு நோய்க்கு மருத்துவர் என்ன செய்வார்)
(வயிறு புண்ணானது போன்ற ஒரு உணர்வு தோன்றியதால் கபசுர குடிநீர் பருகுவதை நிறுத்திவிட்டேன்)

9ம் நாள் காலை 11 மணி, மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துவிட்டது. ஆம் நான் ஒரு கோரானா நோயாளி.
இப்போது என் குடும்பம் மிகவும் பதட்டம் ஆகிவிட்டது.
என் மனைவி அரசாங்கம் வந்து என்னை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மிகவும் பயந்து தன் தம்பியை, என் மச்சினனை உடனே உதவிக்கு அழைத்தாள். சென்னையின் மிகப்பிரபலமான கோவிட் மருத்துவமனையில் அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கு அப்பாயின்மென்ட் வழங்கப்பட்டது உபயம் என் மைத்துனன்.

என்னை பல பரிசோதனைகள் மேற்கொண்ட பின் அந்த மருத்துவர் என் மனைவியிடம் மிக உறுதியான ஒரு வார்த்தை சொன்னார் “உங்கள் கணவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் இனி அவருக்கு எந்த மருத்துவ உதவியும் தேவையில்லை.”

தனிமைப்படுத்திக் கொண்டதை மேலும் பத்து நாட்களுக்கு தொடர சொன்னார். என்னை அவர் பரிசோதித்ததை அறிக்கையாக தயார் செய்து கொடுத்தார். அரசாங்கத்திடமிருந்து ஆள் வரும்போது அதை காட்டச் சொன்னார்.

அந்த மருத்துவர் என் மனைவியின் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தார். என் மனைவி அந்த மருத்துவரிடம் என்னை அரசாங்கம் கூட்டி செல்ல மாட்டார்கள் என்ற உறுதியை பெற்றுக்கொண்டு விடைபெற்றோம். சுரம் இல்லை.

உடல் வலி சுத்தமாக இல்லை. பசி இல்லை, தாகம் இல்லை. நானாகவே உணவும் தண்ணீரும் எடுத்துக்கொள்கிறேன். உடல் தன்னுடைய அனைத்து சக்திகளையும் இழந்து விட்டிருக்கிறது. இந்த சுய சிறைக்குள் எதிர் வரும் நாட்களை ஓட்டவேண்டும்.

என்னை காப்பாற்றியதாக நான் கருதும் மூன்று விஷயங்கள்.

  1. ஆக்சிஜன் அளவு குறையும் போது எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து பருகுவது.
  2. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆவி பிடித்தது ( மூன்று நாட்கள் மட்டும்)
  3. சூடான ஏதாவது ஒரு பானத்தை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொண்டது, (5 நாட்கள்)
  4. என்னை வெளியில் இருந்து கவனித்துக் கொண்ட என் மனைவி.
    இவையே என்னை காத்தது என நான் உறுதியாக நம்புகிறேன்.

தொண்டையில் உருவாகும் இந்த கிருமியை நுரையீரலுக்கு அனுப்புவதும், வயிற்றுக்கு அனுப்புவதும் நம் கையில்தான் உள்ளது.

கிருமி நுரையீரலுக்குச் என்றால் அது உங்களை வென்று கொண்டிருக்கிறது என்று பொருள். வயிற்றுக்கு சென்றால் நீங்கள் அதை வென்று விட்டீர்கள் என்று பொருள். வயிற்றுக்கு அனுப்பும் வேலையை நீங்கள் குடிக்கும் சூடான பானம் செய்து விடும். பயம் கொள்ள தேவையில்லை.

மூச்சு விட மிகவும் சிரமமானால் இரண்டு கைகளையும் மேலே தூக்கிக்கொண்டால் நன்றாக மூச்சுவிட முடியும். கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
நாம் வாழப் பிறந்தவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஒரு நோயிடம் தோற்றுப் போபவர்கள் அல்ல‌.

என் குடும்பம், என் நண்பர்கள் மற்றும் என்னை பார்க்காமலே எனக்காக சிபாரிசு செய்த என் மைத்துனனின் நண்பர்கள், எனக்கு பிரச்சனை என தெரிந்தவுடன் என்னை தொடர்பு கொண்டு உதவி செய்த நமது சங்க பிரதிநிதிகள் என அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.. தன்னுடைய பகிர்வை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *