ரவா லட்டு
ரவையில் உப்புமா, ஸ்வீட் செய்வது வழக்கம். அதிலும் அதிக நேரம் பிடிக்காமல் மிக எளிதாகக் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில், அதிரடியாக செய்யக்கூடிய லட்டு இது. அதிரடியாக ஒரு ஸ்வீட் செய்யலாம் என்றால் ரவா லட்டு செய்யலாம்.
- மிக எளிதாகக் குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் அதிரடியாக செய்யக்கூடிய லட்டு இது.
- ரவையில் உப்புமா, ஸ்வீட் செய்வது வழக்கம்.
- அதிரடியாக ஒரு ஸ்வீட் செய்யலாம் என்றால் ரவா லட்டு.
சோன்பப்டி, ரவா லட்டு வண்டியில் வீதி வீதியாக விற்பார்கள். அந்த லட்டை விட இது அசத்தலாக இருக்கும். இந்த ரவா லட்டு ஒரு வாரம் வரை செய்து வைத்து சாப்பிடலாம். இதன் சுவை நன்றாக இருக்கும். சரியாக வறுக்கா விட்டால் ரவா லட்டு சுவை குறையும். ரவையை நெய் விட்டு வறுக்கும் போது அதன் வாசனையுடன் ரவா லட்டு செய்யும் போது வீடே கமகமக்கும். தீபாவளி பலகாரங்கள் உடன் இந்த லட்டு செய்து பாருங்கள்.
ரவா லட்டு
தேவையான பொருட்கள்
200 கிராம் வறுத்த ரவை, 150 கிராம் பொடித்த வெள்ளை சர்க்கரை, ஏலக்காய் 5, முந்திரி 15 பல், காய்ந்த திராட்சை பழம் 20, பாதாம் 10, நெய் 25 மில்லி, பால் 100 மில்லி.
செய்முறை விளக்கம்
ஒரு வாணலியில் ரவையை இளவறுப்பாக வறுத்து பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும். ஒரு மிக்ஸியில் சர்க்கரை, ஏலக்காய் இரண்டும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி பொடி செய்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் ரவையை கொட்டி பொடித்த சர்க்கரையும் கலந்து வைக்கவும். பிறகு பாலை சூடு செய்து எடுத்துக் கொள்ளவும்.
முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் பழம், உலர்ந்த திராட்சை, இளம் வறுப்பாக வறுத்து எடுத்து வைக்கவும். பொடித்த சர்க்கரை, ரவை கலந்த கலவையுடன் இவற்றையும் கொட்டி அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிது சிறிதாக பால் கலந்து பிசையவும். அதிக பாலை உடனடியாக ஊற்ற வேண்டாம். இரண்டு ஸ்பூன் அளவிற்கு கொஞ்சமாக விட்டு கிளறவும். இதனுடன் சிறிது நெய் விட்டு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் சூடு ஆறுவதற்குள் உருண்டை பிடித்து தேவையான பெரிது, சிறிதாக உருண்டை பிடித்து ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
ஆறியவுடன் சுத்தமான காற்று புகாத டப்பாவில் அடைத்து மூடி எடுத்து வைக்கவும். தேவையான பொழுது எடுத்து பரிமாறவும். சரியாக வறுக்கா விட்டால் ரவா லட்டு சுவை குறையும். ரவையை நெய்விட்டு வறுக்கும் போது அதன் வாசனையுடன் ரவா லட்டு செய்யும் போது வீடே கமகமக்கும்.