இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம்
ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

இன்றைய ராசிபலன்:
மேஷம் இன்றைய ராசிபலன் – Aries
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்துவரும் இருப்பதும் கூடுதல் முயற்சி செய்வதால் நல்ல முன்னேற்றப் பாதையை நோக்கி இவர்கள் செல்வார்கள் உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலை நிலவி வரும்.
ரிஷபம் இன்றைய ராசிபலன் – Taurus
புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல நாள் ஆகும். வெங்கடாஜலபதி வழிபாடு உங்கள் முயற்சிகளை மேலும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் மற்றும் தொழிலில் internal சேஞ்ச் எனப்படும் கம்பெனிக்கு உள்ளேயே மாறுதல்கள் வர உள்ளது என்றாலும் நல்ல மாறுதல்கள் ஆகவே இருக்கும். முருகப் பெருமான் வழிபாடு முற்றிலும் உங்கள் மனக் கவலையை தீர்க்கும்
மிதுனம் இன்றைய ராசிபலன் – Gemini
அன்பர்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு. வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள் .
கடகம் இன்றைய ராசிபலன் – Cancer
நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வார்கள். வெளிநாடுகளில் படித்து கொண்டிருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடையும் நாளாக இருக்கும்.
சிம்மம் இன்றைய ராசிபலன் – Leo
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். இருப்பினும் இன்று மாலை குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவி உறவு மேம்படும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சற்று காலதாமதமாகி வெற்றிகரமாக முடியும்.
கன்னி இன்றைய ராசிபலன் – Virgo
அன்பர்களுக்கு மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். என்றாலும் சற்று கூடுதல் முயற்சி தேவைப்படும் உயர்கல்வி கற்ற கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் எடுக்கும். காரியங்களில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.
துலாம் இன்றைய ராசிபலன் – Libra
நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சியும் தனவரவும் உண்டாக வாய்ப்புண்டு.
விருச்சிகம் இன்றைய ராசிபலன் – Scorpio
அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று தாமதத்திற்குப் பின் வெற்றிகரமாக முடிக்கும்.
தனுசு இன்றைய ராசிபலன் – Sagittarius
நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலாக கவனம் செலுத்தினால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். உயர்கல்வி கற்று கொண்டு இருப்பவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையில் இருக்கும்.
மகரம் இன்றைய ராசிபலன் – Capricorn
அன்பர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாள் ஆகும். வெளிநாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். மாணவர்கள் கல்வியில் ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும்.
கும்பம் இன்றைய ராசிபலன் – Aquarius
நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக செல்லும். காதல் தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். தம்பி மற்றும் தங்கைகளுடன் சர்ச்சை கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல்நலம் நன்றாக இருக்கும்.
மீனம் இன்றைய ராசிபலன் – Pisces
அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். மாணவர்களின் கல்வி நிலை நன்றாக இருந்து வரும். உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டு. ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதலுடன் ஒற்றுமை ஏற்படுவதற்கான இணக்கமான சூழ்நிலை நிலவும்.
இன்றைய பஞ்சாங்கம்:
15 பிப்ரவரி மாதம் 2022 பிலவ வருடம் செவ்வாய்க்கிழமை மாசி 3
வளர் பிறை
திதி :- இன்று இரவு 10.38 மணி வரை சதுர்த்தி பின்னர் பெளர்ணமி திதி
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 2.23 மணி வரையில் பூசம் பின்னர் ஆயில்யம் நட்சத்திரம்
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மூலம், பூராடம்
இன்றைய நல்ல நேரம்காலை :- 07:30 மணி முதல் 09:00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
கெளரி நல்ல நேரம்:
காலை 10.30 முதல் 11.30 வரை
மாலை 7.30 மணி முதல் 8.30 வரை
ராகு காலம் – மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் – காலை 9.00 மணி முதல் காலை 10.30 வரை
குளிகை காலம் :- மதியம் 12:00 மணி முதல் 01:30 மணி வரை
மாலை 6 முதல் இரவு 7.30 மணி வரை
குளிகை காலத்தில் செய்யும் விசயம் திரும்பவும் நடைபெறும் என்பதால் செய்யும் காரியங்களை யோசித்து அனுசரித்து செய்யவும்)
சூலம் :- வடக்கு
பரிகாரம் – பால்