ImagesVideosசினிமா

குறைந்த செலவு நிறைய காதலுடன் ராணாவின் திருமணம்

கொரோனாவால் மகிழ்ச்சியாக இருக்கும் கும்பல் யார் என்றால் தற்போது மிக குறைந்த செலவில் திருமணங்களை நடத்தும் மக்களே. ஏழை எளியவர்களுக்கு அது பொருந்தும் ஆனால் பல மதிப்பு சொத்துக்களை வைத்துள்ளவர்களுக்கும் திருமணத்திற்காக பல கனவுகளை கொண்டுள்ளவர்களுக்கும் இதை என்னவென்று சொல்வது!

திருமணத்துக்கு தயாராகி இருக்கும் ராணா தகுபதி மிஹுகா பஜாஜின் பொன்னான தருணங்கள்.

பொண்ணு ரெடியா என்று கேட்கும் தருணத்தில் இன்னும் பத்து நிமிஷம் என்று சொல்லி அரை மணி நேரம் கழிக்கும மணப்பெண்ணின் அலங்கார காட்சி இதோ.

திருமண விழாவின் ஒரு பகுதியான ஹல்தியை கொண்டாடும் இருவீட்டாரின் கலந்துகட்டிய படங்கள் கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.

மணமகனின் சகோதரிகளும் மணமகளின் சகோதரரும் இல்லாமல் திருமணம் நடக்குமா! அவர்கள் தானே திருமண சடங்குகளில் மணமக்களுக்கு பிறகு முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

திருமணத்தை கலகலப்பாக்கும் தோழர்கள் அடி தூளான பகுதி. ராணாவும் சமந்தாவும் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் கொடுக்கும் போஸ் பல லைக்ஸ்களை தட்டிச் செல்லும்.

சூரியகாந்தி போன்ற ஒரு ஆடையும் பன்னீர் புஷ்பம் போன்ற ஒரு ஆடையும் முகம் நிறைய மல்லிகை பூ பூத்து தொங்கும் சிரிப்பும் மணமகள் மிஹுகா பஜாஜ்ஜின் அலங்கார சிறப்பு.

இதை பார்த்துக் கொண்டே இருங்கள் அடுத்தடுத்து திருமண புகைப்படங்களும் கூடிய விரைவில் ரிலீஸாகும். படம் ரிலீஸ் கூட இப்படி வெயிட் பண்ண மாட்டோம் போல இருக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *