அன்பும் உறவும்வாழ்க்கை முறைவாழ்வியல்

ரக்சாபந்தன் சிறப்பு தினம் இன்று !

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ அண்ணன் தம்பிக்குள்ள தான் இந்த டயலாக் சொல்லணும்னு அவசியம் இல்லை அக்கா தம்பிக்குள்ள கூட இந்த டயலாக்கை சொல்லலாம் ஏன்னா இன்னைக்கி ரக்ஷா பந்தன் மக்களே.

ரக்ஷா பந்தன் சொல்லுக்கு உறவுகளைக் காக்க கட்டப்படும் ரக்ஷை என்ற எளிய பொருள் தரக்கூடியது. சந்திரனின் போக்கைக் கொண்டு பிறக்கும் மாதங்கள் சாந்திர மாதங்கள் என சொல்லப்படுகிறது. அந்த சாந்திர மாதமான ஷரவண மாத பௌர்ணமியன்று ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.

சகோதரிகள் தன் சகோதரன் கையின் மணிக்கட்டில் கட்டப்படும் கயிறை ரக்ஷை என்ற பெயர் சொல்வர். அதுமட்டுமல்லாமல் திலகமிட்டு ஆர்த்தி காட்டி இனிப்பும் வழங்குவர். அதற்கு சகோதரர் தன் சகோதரிக்கு பரிசுகளை தருவாங்க இப்படி தாங்க இந்த பண்டிகையக் கொண்டாடுறாங்க.

உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லலாமா! ஒன்னு இல்லைங்க பல கதை இருக்கு இப்போ ஒன்னு சொல்றேன். மகாபாரதத்தில கிருஷ்ணருக்கும் திரௌபதிகும் நடுவுல நடந்த நிகழ்ச்சி தாங்க இந்த ரக்ஷா பந்தன் உருவாக காரணமாக இருந்திருக்குனு வரலாறு சொல்லுது.

ஸ்ரீ கிருஷ்ணர் தன்னுடைய வீட்டிற்காக கரும்புகளை சீவி கொண்டிருந்தபோது கையில் காயம் ஏற்பட ருக்மணிதேவி மருத்துவர்களுக்கு குரல் கொடுத்து காத்திருந்தார். இந்த நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்த திரௌபதி தன்னுடைய ஆடையிலிருந்து சிறு துண்டு துணியை கிழித்து ரத்தம் அடங்கு காயத்தை கட்டியுள்ளார். பிற்காலத்தில் அந்த ரக்ஷையே கௌரவ சபையில் திரௌபதிக்கு நேர்ந்த அநீதியை ஸ்ரீ கிருஷ்ணர் துகில் கொடுத்துக்காத்தார்.

பெரும்பாலும் ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு சொல்லப்படும் புராண வரலாற்றுக் கதை இதுவே. இதனைத் தவிர்த்து யமன்-யமுனா, ராஜா பலி-ஸ்ரீ மஹாலக்ஷ்மி, ஸ்ரீ கணேசா-மானசா, ராணி கர்ணாவதி-பேரரசர் ஹுமாயுன், கிங் போரஸ்-ரோக்ஸானா போன்ற வரலாற்று கதைகளும் சொல்லப்படுதுங்க.

இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க பண்டிகையை தெரிஞ்சு கொண்டாடுவதில் ஒரு ஆனந்தம் தானே! சிலேட்குச்சியின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ரக்ஷா பந்தன் தின நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *