ஆஹா ரசிகரின் ஆசை தலைவரின் பிரார்த்தனை
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தலைவர் ரசிகன் அன்புடன் கேட்டுக்கொண்ட வார்த்தைகளுக்கு காணொளி மூலம் ஆறுதலையும் பிரார்த்தனையும் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
உங்க ஊர்ல கொரோனா எப்படி இருக்கு? சமீபத்தில் எல்லா இடத்துலயும் கேட்கிற கேள்வி இதுதாங்க. நீங்க எப்படி இருக்கீங்கன்னு கேட்கிற கேள்வி மாதிரி ஆயிடுச்சு.
இந்தியா முழுவதும் பரவியிருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு நடுவில் சிலர் உயிர் பிழைத்துக் கொள்கிறார்கள். மேலும் சிலர் வேறு உடல் உபாதைகளுடன் இந்த கொரோனாவும் சேர்ந்தால் உயிரிழப்பு என்னும் துக்ககரமான சம்பவம் நிகழ்கிறது.
மும்பையில் முரளி தர்ஷன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறார். மேலும் அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதால் நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கிறது. தான் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டோம் என்று முடிவெடுத்த இவர் வென்டிலேட்டரில் இருப்பது போல் புகைப்படத்துடன் தலைவர் ரஜினிகாந்துக்கு சில விஷயங்களை கூறி டுவீட் செய்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறிய பின் எந்தவித அறிவிப்பும் அதனைப்பற்றி வெளியிடாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசியலில் வந்தபின் ஜெயித்த என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு இவர் இட்ட பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சிறு தளர்வுகள் மட்டுமே இருக்கும் நிலையில் திரையுலகில் பலர் ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை. முரளி தர்ஷனின் டுவீட் சமூக வலைத்தளத்தில் பரவி வர படம் பிடிப்பு எதற்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும் ரஜினிகாந்த்திற்கு எட்டியது. அவரும் முரளி குணமடைய வேண்டும் என காணொளியாக வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் தெரிவித்து குணமடைந்த பிறகு குடும்பத்துடன் தன்னை வந்து காணவும் அழைத்துள்ளார்.
இதனை கேட்ட மற்ற ரசிகர்களும் தாம் முரளி தர்ஷினின் உறவினர் ரஜினிகாந்தை காண வேண்டும் என அவரவர் ட்விட்டர் பக்கத்தில் டுவீட் செய்து கொண்டிருக்கின்றனர். மேலும் சிலர் தங்கள் பிரார்த்தனையை செலுத்துவதோடு தலைவரின் காணொளியும் பிரார்த்தனையும் கிடைத்த முரளியை பாக்கியசாலியாக குறிப்பிட்டுள்ளனர்.
முரளி குணமடைய வேண்டும் என சிலேட்குச்சியும் பிரார்த்திக்கிறது.