போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் தைரியமா இருங்க தலைவர் அறிக்கை நமக்கு !
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரானா பிரச்சினையும் அன்றாட வாழ்க்கை போராட்டத்தையும் பார்க்கும்போது உலக நாடுகள் எல்லாம் ஸ்தம்பித்து நிற்கின்றது. வாழ்க்கையில் நமக்கு எது இருக்கோ, இல்லையோ உடல் ஆரோக்கியம் அவசியம் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதை நமது தலைவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரானா தொற்று அதன் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் ஆரோக்கியம் போச்சானா எல்லாம் போச்சு என்கின்றார்.
கொரானா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்துவரும் ரஜினி மன்றம் நிர்வாகிகளுக்கும் பாராட்டுகளை தனது அறிக்கையில் தெரிவித்துக் கொள்கிறார். மேலும் இத்தருணத்தில் மக்களுக்கு ஆறுதலும் எச்சரிக்கையும் கொடுத்து விழிப்புணர்வுடன் மக்கள் இருக்கவேண்டுமென ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒன்று தெரிகின்றது போடா அந்த ஆண்டவனே நம்மப் பக்கம் என தைரியமாகக் ஆரோக்கியமாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று புரிகின்றது.
வல்லரசு நாடுகள் வாட்டிவதைக்கும் இந்த வைரஸின் அட்டகாசம் இந்தியாவை இன்னும் என்ன செய்யுமோ என்கிற ரீதியில் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதன் தாக்கம் இன்னும் அதிகமாகும் இதன் வீரியம் நம்மை நிச்சயம் பதம் பார்க்கும், குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும். அவர்களின் தேவைகளை முறையாக போட்டு செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
முக கவசம் அணிவது இனிவரும் காலங்களில் தவறாமல் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி என்பது அவசியம் பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். கெத்தா தில்லா இருக்க வேண்டும்னா உடம்புல தெம்புடன் இருக்க வேண்டும் என்பதை தலைவர் பாணியில் நாம் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் பொது இடங்களில் எச்சில் துப்புவது தவிர்க்கவேண்டும்.
எங்குச் சென்று வந்தாலும், கைகளைக் கழுவ வேண்டும் சுகாதாரம் பேணி பாதுகாக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆற்றல் தரும் உணவுகள் என பட்டியலிட்டு அவற்றை உண்டு வருதல் அவசியமாகும். அளவான உடற்பயிற்சி என்பதை இந்தக் காலத்தில் செய்ய வேண்டும்.
ஒரே இடத்தில் இருப்பதால் மனம் சற்று சோர்ந்து போயிருக்கும் தேவையற்ற குழப்பங்கள் நம்மை வாட்டி வதைக்கும். இது குறித்தும் கவலை கொள்ளாமல் எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்பதை மனதில் கொண்டு பாசிட்டிவாக கூலாக கொண்டு செல்லுதல் தற்போது மிகவும் அவசியமாகின்றது.
போடா அந்த ஆண்டவனே என் பக்கம் என்கிற டயலாக்கை மனதில் வைத்துச் செயல்படுவோம். கோவித்-19 தொற்று தாக்கம் நிச்சயம் முடியும் ஒளியும் நாடு வளம் பெறும். நமது தொழில் பெருகும் நம்புவோம் துணிந்து செயல்படுவோம் சாதிப்போம்