ரஜினி அரசியல் ரணகளமாக்கும் ஊடகங்கள்
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதன் பொருட்டு தமிழக கட்சிகள் விதவிதமாகச் செய்து வருகின்றனர். முக்கியமாகத் திமுக, அதிமுக கட்சிகளின் அலப்பறைகள் விண்ணுக்கும் மண்ணுக்கும் தெரித்து விடப்படுகின்றன.
- தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரஜினி அரசியல் முடிவுகளை தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- தமிழக அரசியலில் ரஜினியின் பங்கு இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
உடல்நிலைக் காரணமாக அரசியல் பின்னடைவா
பத்தாக்குறைக்கு தற்போது ரஜினி உடல்நிலை காரணம் காட்டி அவர் தப்பிக்க முயல்கின்றார். ரஜினியின் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளிடம் பேசியதை வைத்து ஊடகங்கள் தங்கள் பங்கிற்கு கொழுத்திப் போட்டு வருகின்றன.
ரஜினி இந்த முறை அரசியலில் இறங்கப் போகிறாரா என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ரஜினி ஆலோசனை குறித்து ஆயிரக்கணக்கான கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் கடந்த இரண்டு நாட்களாக ரஜினி அரசியல் குறித்து பேச்சுவார்த்தை ஊடகங்கள் மற்றும் மக்களும் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
ரஜினி யோசனைக்கு உடல்நிலை காரணம்
ஆனால் ரஜினி ஏன் தீவிரமாக யோசிக்கிறார் அவரின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என கேள்விகள் எழுந்து காணப்பட்டுகின்றன. உடல் நலக்குறைவு காரணமாக அரசியலில் இறங்கினாள் வெற்றி கிடைக்குமா என்ற இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஊடகங்கள் கணிப்பு ரஜினி பதில்
ஊடகங்கள் சரமாரியாகப் ரஜினியை வைத்துப் பேசித் தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றன. எது எப்படியோ ரஜினி தற்போது தயாரான மனநிலையுடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை நாம் அறிய ஆவலுடன் இருக்கின்றோம்.
இன்றைய நாட்களில் பல கருத்துக் கணிப்புகள் பல செய்து நாம் வல்லுநர்கள் என்று நிரூபித்துக் கொள்ளலாம். ஆனால் உண்மையான சிந்தனை எங்கு இருக்கின்றது என்பது நடந்தால் தான் தெரியும்