அடுத்த 24 மணி நேரத்திற்கு அடிச்சு வெளுக்க போகும் மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி இன்று இரவு 11.30 மணி வரை கடல் உயர் 1.8 முதல் 2.8 மீட்டர் வரை எலும்பு கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருமயம் – புதுக்கோட்டை மாவட்டம் 10, தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் 9, சூலாங்குறிச்சி, கள்ளக்குறிச்சி, உதகமண்டலம் – நீலகிரி மாவட்டம், சூளகிரி- கிருஷ்ணகிரி மாவட்டம், வேடசந்தூர் – திண்டுக்கல் மாவட்டம், ஈரோடு தலா மூன்று சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளன.
காரைக்குடி – சிவகங்கை மாவட்டம், வாடிப்பட்டி – மதுரை மாவட்டம், மருங்காபுரி – திருச்சி மாவட்டம் தலா 5 பதிவாகியது. அரிமளம் – புதுக்கோட்டை மாவட்டம், அம்பத்தூர் – திருவள்ளூர் மாவட்டம் தலா ஆறு பதிவாகியது. புதுக்கோட்டை, பள்ளிப்பட்டு – திருவள்ளூர் மாவட்டம் தல 5 பதிவாகியுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.
வெப்ப சலனம் காரணமாக மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்ப்பு என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அடிச்சு வெளுக்க போகும் மழை எந்த ஊருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறது.
நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாக கூடும். இன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளன.
கடலோர மாவட்டங்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளன.